ஒளியியல்

  • முதன்மை நிறங்கள் சிவப்பு, பச்சை, நீலம்.
  • ஒளிவிலகல் (Difraction) என்ற சொல் 'லத்தீன் சொல்'. விலகல் எண்
  • காற்று ஊடகத்தின் ஒளி விலகல் எண் 1
  • பனிக்கட்டியின் ஒளி விலகல் எண்  1.3
  • நீரின் ஒளி விலகல் எண் 1.33
  • மண்ணெண்ணெய் ஒளி விலகல் எண்1.44
  • வைரத்தின் ஒளி விலகல் எண் 2.42
    தொலைநோக்கி
  • கலிலியோ கி.பி 1609ம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார். இதன் மூலம் நிலவு, சூரியன், கோள்கள் மற்றும் வீண்மீன்களைப் பார்த்தார். 
  • தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டு 400 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கி.பி 2009ம் ஆண்டு உலக விண்வெளி ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.
  • கலிலியோ பயன்படுத்திய தொலைநோக்கிக் கருவி தற்போது இத்தாலி நாட்டில் உள்ள ஃபிளாரன்ஸ் நகரில் உள்ளது.
  • ஒளிபுகும் பொருள்கள் (Transparent Objects) (எ.கா.) கண்ணாடி, தூயநீர்.
  • ஒளி புகாப் பொருட்கள் (Opaque Objects) (எ.கா.) கல்,பந்து.
  • ஒளி கசியும் பொருட்கள் (Translucent Objects) (எ.கா.) எண்ணெய் தடவிய தாள், சிலதுளி பால் கலந்த நீர்.
  • எல்லாப் பொருள்களும் அவற்றின் நிழல்களை உருவாக்குவதில்லை.
  • ஒளிபுகாப் பொருட்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
  • எப்பொழுதுமே ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில்தான் நிழல் உருவாகும்.
  • பளபளப்புடன் சமதளமாக உள்ள பரப்புகள் தெளிவான பிம்பத்தை உருவாக்குகின்றன. 
  • பார்க்கும் உணர்வைத் தரும் ஆற்றல் ஒளி எனப்படும்.
  • ஒளி பொருட்களின் மீதுபட்டு திருப்பி அனுப்பப்படும் செயல் எதிரொளிப்பு எனப்படும்.
  • தன் மீது விழும் ஒளியை ஏறக்குறைய முழுவதுமாக எதிரொளிக்கக்கூடிய பளப்பளப்பான பரப்பு ஆடி எனப்படும்.
  • ஒளி எதிரொளிப்பதால் பிம்பம் உருவாகிறது.
  • சமதள ஆடியில் உருவாகும் பிம்பம் மாய பிம்பம் ஆகும்.
  • சமதள ஆடி உருவாக்கும் பிம்பத்தின் அளவு பொருளின் அளவிற்கு சமமாக இருக்கும். 
  • நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் முன் வித்தியாசமான ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். (எ.கா) AMBULANCE → ECNALUBMA
  • ஆடியில் முழு உருவத்தைக் காண ஆடியின் உயரம் குறைந்தது பொருளின் உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். ஆடிக்கு முன் பொருள் எவ்வளவு தொலைவில் உள்ளதோ அதே தொலைவில் ஆடிக்குப்பின் பொருளின் பிம்பம் தோன்றும்.
  • காரின் முகப்பு விளக்கு மற்றும் தொலைநோக்கிகளில் குழிஆடி பயன்படுகிறது.
  • வாகனங்களில் பின்புறத்தில் உள்ளவற்றைப் பார்க்க மற்றும் அதிகமான இடத்தைக் கண்காணிக்க குவி ஆடிகள் பயன்படுகின்றன.
  • சூரிய ஒளி பல வண்ணங்களைக் கொண்டது. முப்பட்டகத்தில் ஒளியைச் செலுத்தினால் ஏழு நிறங்களாகப் பிரியும் (VIBGYOR)
  • ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலைநோக்கி வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள காவனூர் ஆராய்ச்சி மையத்தில் உள்ளது.
  • வட்டு வேகமாகச் சுழலும்போது ஏறக்குறைய வெள்ளையாகத் தெரியும்.
  • தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு 25 செ.மீ.
  • அகச்சிவப்புக் கதிரின் இயற்கை மூலம், சூரியன்.
  • நிறப்பிரிகையின் விளைவாகத் தோன்றும் வண்ணத் தோற்றம் நிறமாலை எனப்படும்.
  • மிக அதிகமாக விலகல் அடையும் நிறம், ஊதா.
    மிகக் குறைவாக விலகல் அடையும் நிறம், சிவப்பு.
  • எல்லா நிறங்களையும் ஈர்த்துக் கொள்ளும் பொருள் கருமையாகத் தோன்றும்.
     

கருத்துரையிடுக

0 கருத்துகள்