வேலு நாச்சியார் அம்புஜத்தம்மாள் கடலூர் அஞ்சலையம்மாள்

வேலு நாச்சியார்:
- வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
- இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள்
இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு
நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு,
ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.
- ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணமடைந்தார்.
- வேலு
நாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து, ஆங்கிலேயரை எதிர்ப்பது
குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி ஐயாயிரம்
படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.
- மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத்
தலைமையேற்றுச் சென்ற வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.
அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.
0 கருத்துகள்