புறத்திரட்டு என்னும் இந்நூல் நீதித்திரட்டு, பிரசங்காபரணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு தமிழ் திரட்டு (தொகுப்பு) நூல். இது 15ம் நூற்றாண்டில் திரட்டப்பட்டது.
இந்த நூலில் 1570 செய்யுள்கள் உள்ளன. இதில் மறைந்து போன பல நூல்கள் பற்றிய விபரங்கள் உள்ளன.
இத்தொகை நூல் 1938இல் வையாபுரிப்பிள்ளையால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. அதன் மறுஅச்சு அவராலேயே 1939இல் பதிப்பிக்கப்பட்டது.
இதில் உள்ள பாடல்களில் பதினெண்கீழ்க்கணக்கு செய்யுட்களுக்கு சிறந்த பாடம் கிடைத்ததால் “இது எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்” என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்