தமிழ்ச்சொல் வளம்

10th Tamil | Tamil Solvalam | தமிழ்ச்சொல் வளம்


தாவரங்களின்
அடிப்பகுதிப் பெயர்:
  • தாள்நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
  • தண்டுகீரை, வாழையின் அடி
  • கோல்நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
  • தூறு- குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
  • தட்டு () தட்டைகம்பு, சோளம் முதலியவற்றின் அடி
  • கழிகரும்பின் அடி
  • கழைமூங்கிலின் அடி
  • அடிபுளி, வேம்புவின் அடி

அடிப்பகுதிபிரிவு பெயர்:

  • கவைமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
  • கொம்பு () கொப்புகவையின் பிரிவு
  • கிளைகொம்பின் பிரிவு
  • சினைகிளையின் பிரிவு
  • போத்துசினையின் பிரிவு
  • குச்சிபோத்தின் பிரிவு
  • இணுக்குகுச்சியின் பிரிவு

தாவர இலைப் பெயர்:

  • புளி, வேம்புஇலை
  • தென்னைபனை
  • நெல், புல்தாள்
  • காய்ந்த இலைசருகு
  • சோளம், கரும்புதோகை

தாவரங்களின் பிஞ்சுவகைப் பெயர்:
(
பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சுஇளம்காய்)

  • வடுமாம்பிஞ்சு
  • இளநீர்முற்றாத தேங்காய்
  • மூசுபலாப்பிஞ்சு
  • நுழாய்இளம்பாக்கு
  • கவ்வைஎள் பிஞ்சு
  • கருக்கல்இளநெல்
  • குரும்பைதென்னை, பனை பிஞ்சு
  • கச்சல்வாழைப்பிஞ்சு

தாவரங்களின் குலைப் பெயர்:

  • கொத்துஅவரை, துவரை
  • கதிர்கேழ்வரகு, சோளக் கதிர்
  • குலைகொடி முந்திரி
  • அலகு () குரல்நெல், தினைக் கதிர்
  • தாறுவாழைக்குலை
  • சீப்புவாழைத் தாற்றின் பகுதி

கெட்டுப்போன காய், கனிப்பெயர்:

  • சூம்பல்நுனியில் சுருங்கிய காய்
  • சிவியல்சுருங்கிய பழம்
  • சொத்தைபுழுபூச்சி அரித்த காய் () கனி
  • வெம்பல்சூட்டினால் பழுத்த பிஞ்சு
  • அளியல்குளுகுளுத்த பழம்
  • அழுகல்குளுகுளுத்து நாறிய பழம் () காய்
  • சொண்டுபதறாய்ப் போன மிளகாய்
  • கோடான்காய் () கூகைக்காய்கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
  • தேரைக்காய்தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
  • அல்லிக்காய்தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
  • ஒல்லிக்காய்தென்னையில் கெட்ட காய்

பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க அவற்றின் தன்மைக்கேற்ப தாவரங்களுக்கு வழங்கப்படும் சொற்கள்

  • தொலிமிக மெல்லியது
  • குடுக்கைசுரையின் ஓடு
  • தோல்திண்ணமானது
  • மட்டைதேங்காய் நெற்றின் மேற்பகுதி
  • தோடுவன்மையானது
  • உமிநெல், கம்பு ஆகியவற்றின் மூடி
  • ஓடுமிக வன்மையானது
  • கொம்மைவரகு, கேழ்வரகு உமி

தானியங்களுக்குத் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள்

  • கூலம்நெல், புல் தானியங்கள்
  • பயறுஅவரை, உளுந்து
  • கடலைவேர்க்கடலை
  • விதைகத்தரி, மிளகாய் வித்து, கொண்டைக் கடலை
  • காழ்புளி, காஞ்சிரை வித்து
  • முத்துவேம்பு, ஆமணக்கு வித்து
  • கொட்டைமா, பனை வித்து
  • தேங்காய்தென்னை வித்து
  • முதிரைஅவரை, துவரை பயறுகள்

தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்

  • நாற்றுநெல், கத்திரியின் இளநிலை
  • கன்றுமா, புளி, வாழையின் இளநிலை
  • குருத்துவாழையின் இளநிலை
  • பிள்ளைதென்னையின் இளநிலை
  • குட்டிவிளாவின் இளநிலை .
  • மடலி () வடலிபனையின் இளநிலை
  • பைங்கூழ்நெல், சோளத்தின் இளநிலை

கருத்துரையிடுக

0 கருத்துகள்