தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும்
தமிழக அரசின் நலத்திட்டங்கள் |
சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில்
சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு இட ஒதுக்கீடும் அதன் பயன்களும்.
மதிய உணவுத் திட்டம்
மதிய உணவுத் திட்டம் என்ற கருத்து தமிழகத்திற்கு புதிதல்ல, ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக 1925-இல், சுதந்திரத்திற்கு முன்பே சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டது. இதே போன்று மற்ற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் தொடங்கப்பட்டது.
இந்தியாவிலேயே, தமிழகம் தான் முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை ஆரம்பப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் குஜராத்தில் 1984-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளடைவில் இத்திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர், இத்திட்டம் தேசிய திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக, ஆகஸ்டு 15, 1995-இல் மதிய உணவு வழங்கும் பொருட்டு, இந்திய அரசு, ஆரம்ப கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை தொடங்கி வைத்தது. 2002-ல் உச்சநீதி மன்றம், மதிய உணவுகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளுக்கு அரசே வழங்க வழி வகுத்தது. இத்திட்டம் செப்டம்பர் 2004, 2006-ல் திருத்தி அமைக்கப்பட்டது.
மதிய உணவு திட்டம், மாநில அரசின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இந்தியாவில், தமிழகம் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாக திகழ்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் சென்னையில் இத்திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். பின்னர், இத்திட்டம் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
ஊட்டச்சத்து குறைபாட்டால், பாதிக்கப்பட்ட 68 லட்சம் குழந்தைகளுக்காக 1982, ஜூலை 1-ல் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர், எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் மேம்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றினார்.
பசி மற்றும் ஊட்டச்சத்து குறைவின் உடனடி தாக்கத்தால், மதிய உணவுத்திட்டம், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கிறது.
பள்ளிகளில் சேர்க்கையை, குழந்தைகளின் குறிப்பாக பெண் குழந்தைகளின் சேர்க்கையை மதிய உணவுத் திட்டம் அதிகரிக்கச் செய்தது என ஆய்வுகள் கூறுகின்றன.
வகுப்பறை பசியை மதிய உணவு வழங்கும் திட்டம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
சமூகமயமாக்கல், சாதி, ஒடுக்கப்பட்ட சமூகம் இவற்றின் மதிய உணவு திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, இத்திட்டத்தில் உணவு வகைகள், பகிரப்படுவதால் சாதிய பாரபட்சமும், வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் குறிப்பாக அகற்றப்பட்டது. பள்ளியிலிருந்து குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் சரிந்தது.
0 கருத்துகள்