தாயுமானவர் TNPSC


பெயர் : தாயுமானவர்.

பெயர் காரணம் : திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.

பெற்றோர் : கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்.

மனைவி : மத்துவார்குழலி

மகன் : கனகசபாபதி

ஊர் : நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)

பணி : திருச்சியை ஆண்ட விச‌யரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்

காலம் : கி.பி. 18ம் நூற்றாண்டு

சிறப்பு பெயர்: தமிழ் சமய கவிதையின் தூண்

படைப்பு: தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

குறிப்பு:

இவரின் பாடலை “தமிழ்மொழியின் உபநிடதம்” எனப் போற்றுவர்.

இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் கல்வி கற்றார்.

இவரின் “பராபரக்கண்ணி” 389 கண்ணிகளை உடையது.

இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்.

சமரச சன்மார்கத்தை உலகிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்.

உபநிடதக் கருத்துக்களை தமிழில் மிகுதியாக சொன்னவர்.

தாயுமானவர் தனிப்பாடல் திரட்டில் 56 உட்பிரிவுகளும் 1452 பாடல்களும் உள்ளன.

பராபரக் கண்ணி, எந்நாட் கண்ணி, கிளிக் கண்ணி, ஆனந்த களிப்பு, ஆகார புவனம் போன்றன இவர் தம் பாடல் தலைப்புகளில் சிலவாகும்.

இவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு “கந்தர் அநுபூதி சொன்ன எந்தை” என்று அருணகிரி நாதரைப் பாராட்டியுள்ளார்.

மேற்கோள்:

கருத்துரையிடுக

0 கருத்துகள்