மயங்கொலிகள்

மயங்கொலிகள்
ல, ள, ழ எழுத்துகள் அமைந்த சொற்கள்

  • அலகு – பறவை மூக்கு
  • அளகு – பெண் பறவை
  • அழகு – வனப்பு

  • அலை – திரை, திரி
  • அளை – தயிர்
  • அழை – கூப்பிடு

  • இலை – தழை
  • இளை – மெலி
  • இழை – நூல்
  • ஒலி – ஓசை
  • ஒளி – வெளிச்சம்
  • ஒழி – கெடு

  • கலை – வித்தை
  • களை – நீக்க
  • கழை – மூங்கில்

  • கிலி – அச்சம்
  • கிளி – ஒரு பறவை
  • கிழி – துண்டாக்கு

  • தலை – சிரசு
  • தளை – கட்டுதல்
  • தழை – இலை
  • தால் – நாக்கு
  • தாள் – கால், பாதம்
  • தாழ் – பணி

  • வலி – வலிமை
  • வளி – காற்று
  • வழி – பாதை

  • வால் – விலங்குகளின் வால் பகுதி
  • வாள் – கத்தி
  • வாழ் – உயிர் வாழ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்