பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகையுள் ஒன்று.
தொல்காப்பியர் பரிபாட்டு அகப்பொருளில் வரும் என்று கூறுகிறார்.
பாவகையால் பெயர்பெற்ற நூல் பரிபாடல்
பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி பேரெல்லை 400 அடி
எட்டுத் தொகை நூல்களிலே அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.
பொருட்கலவை நூல் என்று கூறப்படுவது பரிபாடல்.
தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் இரண்டு. 1) பரிபாடல் 2) கலித்தொகை.
பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
பரிபாடல் என்ற நூல் எழுபது பாடல்களைக் கொண்டதாக இருக்கும்.
இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடலில் 22 பாடல்கள் மட்டுமே உள்ளன.
பரிபாடலைப் பாடிய புலவர்கள் 13 பேர்.
நல்லச்சுதனார், நன்னாகனார், கேசவனார், கண்ணாகனார், பித்தாமத்தர் போன்றோர் பரிபாடலுக்கு இசை வகுத்துள்ளனர்.
வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன.
கடவுள் வாழ்த்துப் பற்றிய பாடல்கள் புறம் சார்ந்தன.
பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.
பரிபாடலை முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
எட்டுத்தொகை நூல்களில் பரிபாடலில் மட்டுமே நான், போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
“நல்லாள் கரைநிற்ப நான் குளித்த பைந்தடத்து’’ (6:87)
“கின்று’’ என்ற காலம் காட்டும் இடைநிலை முதன் முதலில் பரிபாடலில்தான் காணப்படுகிறது.
“தீரமும் வையையும் சேர்கின்ற கண்கவின்’’ - 22: 35
பாற்கடல் கடைந்தது, கருடன் தன் தாயின் துயர் களைந்தது, பிரகலாதன் கதை, முருகன் பிறப்பு, அவன் போர்க்கருவி பெற்றது, அகலிகை சாபம் போன்ற செய்திகள் முதன்முதலில் பரிபாடலில்தான் காண முடிகிறது.
0 கருத்துகள்