பால்வீதி - பரிபாடல்

10th New Tamil Book (2023) Study Materials for TNPSC (GROUP-4, VAO, GROUP-II A)  TET, PGTRB (TAMIL), TN POLICE EXAMS
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும்.

அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.

1300 ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்.

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
.............................................................
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" (திருவாசகம் 3-1-6)

அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளமையான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினைச் சொல்வது எனின், அவை நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

நூல் வெளி - பரிபாடல்

பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.

பாடப்பகுதிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார்.
இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது.
இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்றுவரை 24 பாடல்களே கிடைத்துள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு. அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.
சொல்லும் பொருளும்
  1. விசும்பு ‍- வானம்
  2. ஊழி ‍- யுகம்
  3. ஊழ் ‍- முறை
  4. தண்பெயல் ‍- குளிர்ந்த மழை
  5. ஆர்தருபு  ‍- வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
  6. பீடு ‍- சிறப்பு
  7. ஈண்டி ‍- செறிந்து திரண்டு
இலக்கணக் குறிப்பு
  • ஊழ்ஊழ் ‍- அடுக்குத் தொடர்
  • வளர்வானம் ‍- வினைத்தொகை
  • செந்தீ ‍- பண்புத்தொகை
  • வாரா (ஒன்றன்)‍ ‍- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
கிளர்ந்த – கிளர் + த் (ந்) + த் + அ
கிளர் – பகுதி
த் – சந்தி
த்(ந்) – ந் ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்