வேதியியல் உப்புகளின் பயன்கள்

உப்பின் வகைகளும் பயன்களும்

உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுதுக.

1) சாதாரண உப்பு (NaCl) :

நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.

2) சலவை சோடா (Na2CO3) :

இது கடின நீரை மென்னீராக்கப் பயன்படுகிறது.

இது கண்ணாடி, சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

3) சமையல் சோடா (NaHCO3) :

இது ரொட்டிச் சோடா (சமையல் சோடா + டார்டாரிக் அமிலம்) தயாரிக்கப் பயன்படுகிறது.

இது சோடா – அமில தீயணைப்பான்களில் பயன்படுகிறது.

இது கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.

இது வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

4) சலவைத் தூள் (CaOCl2) :

இது கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.


5) பாரிஸ் சாந்து (Caso4 . 1/2 H2O) :

முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்கு பயன்படுகிறது.

சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்