Constitution of India in tamil | அடிப்படை உரிமைகள்


அடிப்படை உரிமைகள்  (சரத்து 14 முதல் சரத்து 35 வரை)

சரத்து 14 முதல் சரத்து 31 வரை....

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வுகாணும் உரிமை :

சரத்து 32 : தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகி உரிமையை பெறுதல்.

சரத்து 32 இந்திய அரசியலமைப்பின் ஆத்மாவும் இதயம் போன்றது என்றவர் டாக்டர் அம்பேத்கர் ஆவார். 

சரத்து 32 ஐந்து நீதிப்பேராணைகளை கொண்டுள்ளது. நீதிமன்றம் முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடும் கட்டளை அல்லது ஆணை நீதிப் பேராணை எனப்படும். இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும். 
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப் பேராணைகள் வெளியிட அதிகாரம் பெற்றுள்ளது. 
அவை,
  1. ஆட்கொணர் நீதிப்பேராணை, 
  2. கட்டளையுறுத்தும் நீதிப் பேராணை, 
  3. தடையுறுத்தும் நீதிப்பேராணை, 
  4. ஆவண நீதிப் பேராணை, 
  5. தகுதி முறை வினவும் நீதிப் பேராணை 
ஆகியனவாகும். இதுபோன்ற ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளை காப்பதால்தான் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுகிறது.

ஆட்கொணர் நீதிப்பேராணை : சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்நீதிப்பேராணை வெளிநபர் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இச்சட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு எதிராகவும் செயல்படுத்தலாம். ஆனால், குற்றவியல் வழக்குகளில் சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க கோரி இந்த நீதிப்பேராணை பயன்படுத்த இயலாது.

நீதிப்பேராணை அல்லது செயலுறுத்தும் நீதிப் பேராணை : அரசு அலுவலர் தனது கடமையை செய்ய தவறும்போது நீதிமன்றம் அவரது கடமையின் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கும் நீதிப்பேராணை ஆகும். இதனை குடியரசுத் தலைவர், ஆளுநர், தலைமை நீதிபதி ஆகியோருக்கு எதிராக பயன்படுத்த முடியாது.

தடையுறுத்தும் நீதிப் பேராணை : உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் தனக்கு கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கு அவற்றின் எல்லைக்கு உட்பட்ட செயலை செய்யாமல் இருக்க ஆணை பிறப்பிப்பது. இதனை நீதிப்பேராணை நீதித்துறைக்கு எதிராக மட்டுமே செயல்படுத்த முடியும்.

நெறிமுறை உணர்த்தும் நீதிப்பேராணை அல்லது ஆவண கேட்பு நீதிப்பேராணை : உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தனக்கு கீழ் உள்ள நீதிமன்றங்கள் அவற்றின் அதிகார வரம்பை மீறி தீர்ப்புகள் வழங்கும் போது அல்லது ஆணை பிறப்பிக்கும் போது அதனை ரத்து செய்வதாகும்.

தகுதி வினவும் நீதிப்பேராணை : அரசு அலுவலர் ஒருவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் அல்லது அப்பணியை மேற்கொள்ள உண்மையான தகுதியை பெற்றுள்ளாரா என விளக்கம் பெறுவதாகும். இதை தனியார் மற்றும் தனிப்பட்ட அமைப்புகள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பயன்படுத்த இயலாது.

சரத்து 33 : முப்படை வீரர்கள், காவல்துறை, உளவுத்துறை ஆகியோரின் கடமைகளை நிறைவேற்றுதல் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்க நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

சரத்து 34 : ராணுவ ஆட்சி அமலில் இருக்கும்போது அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் காப்பீடு வழங்க நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

சரத்து 35 : அடிப்படை உரிமைகளுக்கு மேலும் செயல்திறன் அழைப்பதற்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்.
அரசியலமைப்பை நிறுத்தி வைக்கும் சில பிரிவுகள் : 

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 352 இன் கீழ் குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது சட்ட பிரிவு 19ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஆறு வகையான சுதந்திரங்கள் தாமாகவே நிறுத்தப்படுகின்றன. 

மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பது மூலம் தடை செய்யலாம். 
குடியரசுத் தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் குடியரசு தலைவரால் இந்திய சட்ட பிரிவு 20 மற்றும் 21 கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை தடை செய்ய முடியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்