SCIENCE & TECHNOLOGY GROUP 2 MAINS

ஓம் விதி வரையறு.

விடை:

மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.

1 ∝ V. எனவே, 1/V = மாறிலி, இந்த மாறிலி மதிப்பு 1/R ஆகும்.
எனவே, 1 = (1/R)V
V = IR

ஜூல் வெப்ப விதி வரையறு.

ஜூல் விதி என்பது மின்னோட்டத்தின் வெப்ப விளைவுடன் தொடர்புடையது. இது கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டத்தை மின்னோட்டம் பாயும் வெப்பத்துடன் தொடர்புபடுத்துகிறது. 

ஜூல் வெப்ப விதியானது  மின்னோட்டப் பாய்வின் காரணமாக வெளிப்படும் வெப்பம் எங்கே உள்ளது என்பதை கணிதரீதியாகக் கூறலாம். 

ஜூல் வெப்பவிதியின்படி, சுற்றில் ஏற்படும் வெப்பம் மின்னோட்டம் மற்றும் நேரம் மாறிலியாக இருக்கும்போது மின்தடைக்கு நேர்த்தகவில் இருக்கும். மேலும், மின்தடையும் நேரமும் மாறாதநிலையில் இருக்கும்போது, உருவாக்கப்படும் வெப்பமானது மின்னோட்டத்தின் சதுரத்திற்கு நேர்த் தகவில் உள்ளது.

மின்னோட்டம் மற்றும் மின் தடை மாறிலியாக இருக்கும்போது உற்பத்தி செய்யப்படும் வெப்பம் நேரத்திற்கேற்ப நேர்விகிதத்தில் இருக்கும்.


LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக. 

விடை:
(அ) LED தொலைகாட்சியின் நன்மைகள் :

  • இதன் வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
  • இது மெல்லிய அளவுடையதாக இருக்கும்.
  • குறைவான சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைவான ஆற்றலை நுகர்கிறது.
  • இதன் ஆயுட்காலம் அதிகம்.
  • இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.

(ஆ) LED விளக்கின் நன்மைகள்

  • LED-ல் மின் இழையில்லாத காரணத்தினால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. மின் இழை மின் விளக்கைவிட குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.
  • ஒளிரும் மின் இழை பல்புடன் ஒப்பிடும் போது இது குறைந்த திறனை நுகரும்.
  • இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
  • பல நிறங்களில் வெளியீட்டினை பெற்றுக் கொள்ள சாத்தியமாகிறது.
  • மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையது.
  • பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் பயன்படுத்தப்படு வதில்லை.
  •  மின்னாற்றல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழி களில் ஒன்று அதிக எண்ணிக்கையிலான LED மின் விளக்குகளை பயன்படுத்துதல் ஆகும்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்