மனித உரிமைகள் | Human Rights in Tamil

மனித உரிமை - அடிப்படை உரிமைகள் - குழந்தைகளுக்கான உரிமைகள் - அரசியலமைப்புவழித்தீர்வுபோக்சா (POCSO) - குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம்சட்டத்தின் முன் அனைவரும் சமம் - தொழிலாளர் நலனுக்காக பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு


1. மனித உரிமை என்றால் என்ன?

விடை:

“இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே” மனித உரிமை ஆகும்.

2. அடிப்படை உரிமைகள் யாவை?

விடை:
அடிப்படை உரிமைகள்.
சமத்துவ உரிமை
சுதந்திர உரிமை
சுரண்டலுக்கு எதிரான உரிமை
சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.
அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

3. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளவை யாவை?

விடை:
குழந்தைகளுக்கான உரிமைகள் :
வாழ்வதற்கான உரிமை.
குடும்பச் சூழலுக்கான உரிமை
கல்விக்கான உரிமை
சமூக பாதுகாப்பு உரிமை
பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
விற்பது மற்றும் கடத்தலுக்கு எதிரான உரிமை
குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற
சுரண்டல்களுக்கு எதிரான உரிமை.

4. அரசியலமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

விடை:

ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற தீர்வழிகளுக்கான உரிமைகளின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.

நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது இது நீதிப் பேராணை என்று அழைக்கப் படுகிறது.

ஒரு செயல் அரசமைப்புச் சட்டத்தின்படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.

5. போக்சா (POCSO) – வரையறு.

விடை:
போக்சா சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகும்.

சிறப்பு அம்சங்கள் :

இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்க்குத் தகுந்த தண்டனை வழங்குகிறது.

குழந்தையின் வாக்குமூலம் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.

6. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

விடை:

குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் தேவை. ஏனெனில் குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

7. தொழிலாளர் நலனுக்காக பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?

விடை:
சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்
பெண் தொழிலாளர் நலநிதி
பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.

8. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.

விடை:
சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆயினும் வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.

பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படுவதனால் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வை இழந்து விடுகின்றனர்.

எனவே பெண்களுக்கான தனிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

9. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.

விடை:
தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (E.S.I.)
தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம்.

மனித உரிமைகள் - மனித உரிமை கோட்பாடு

கருத்துரையிடுக

1 கருத்துகள்