ad

மனித உரிமைகள் - மனித உரிமை கோட்பாடு

மனித உரிமைகள்

    மனித உரிமை என்பது கருவறையில் தொடங்கி கல்லறை வரை தொடர்கிறது.  ஆம் ஒரு மனித உயிர் கருவாய் உருக்கொள்ளும் கணத்திலேயே மனித உரிமை பிறந்து விடுகிறது. ஏனெனில் முறையற்ற கருக்கலைப்பு முழுமையாய் பெரும் குற்றம். மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை. “மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டுமென்று விரும்புகிறாயோ அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு அளி” என்பதே மனித உரிமையின் அடிப்படைத் துத்துவம்.  இந்த மனித உரிமைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது இன்று நேற்று அல்ல. மனிதன் நாகரிக மாக வாழ கற்றுக் கொண்டது முதலே தொடங்கியது.

 
மனித உரிமை கோட்பாடு
மனித உரிமை என்ற சொல், 1766-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் தான் முதன் முதலாக பயன்பட்டதாக அறியப்பட்டுள்ளது. பண்டையக் காலத்தில் மனித உரிமை என்பது தர்மசிந்தனையாகவும், பாவ புண்ணிய மதிப்பீடாகவும் இருந்து வந்திருக்கிறது.

1521-ஆம் ஆண்டு சில குறிப்பிட்ட பிரிவினரின் நல உரிமைகள் குறித்து நீதி வழங்குமாறு பிரிட்டிஷ் மன்னர் ஜார்ஜிடம் சமர்பிக்கப்பட்டமனுக்களே பேருரிமைப் பத்திரம் (Magna Carta)  எனப்படும். இதுவே மனித உரிமையின் தோற்றுவாய் எனக் கருதப்படுகிறது. 1650-ம் ஆண்டு குரோட்டியஸ் (ஊசடிவiடிரள)  என்ற டச்சு தத்துவஞானி ”மனிதனின் இயற்கையான உரிமைகள் உலகந்தழுவியது' என்றார்.
    1688-ம் ஆண்டு இங்கிலாந்தில் உரிமை சாசனம் (Bill of Rights) ஆட்சியாளர்களது ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்தது.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற உயரிய லட்சிய முழக்கங்களோடு பிறந்த பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1789-ஆம் ஆண்டு ‘மனித மற்றும் குடிமக்கள் உரிமை பிரகடனம்’ (The Declaration of Right of man and citizen)  உருவாயிற்று. மனித உரிமை வரலாற்றுக் களத்தில் முதல் தடமென இதனைக் கருதலாம்.

    19-ஆம் நூற்றாண்டில், பாட்டாளி வர்க்க்ததை சுரண்டல் தளையிலிருந்து மீட்கும் அறிவியல் பூர்வமான அரசியல் அறிக்கை வாயிலாக மனித உரிமைகளுக்கு செழுமை சேர்த்தார் காரல் மார்க்ஸ்.

    ‘எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு' என்றக் கோரிக்கையை முன்வைத்து சிகாகோவில் 1886-ஆம் ஆண்டு உழைப்பாளர்கள் உரிமைப் போராட்டம் நடத்தினர். மே தினப் போற்றும் ‘மே தினம்' - என்று இன்றும் அப்போராட்டம் பெருமிதத்துடன் நினைவு கூறப்படுகிறது.
    1914-ஆம் ஆண்டு துவங்கிய முதல் உலகப்போர் முடிவில், ரஷ்யப் புரட்சி வெடித்து ‘நிலம், ரொட்டி, சமாதானம்’ என்கிற அடிப்படை உரிமைகளை முன்னறிவித்தது. ஜெர்மனியில் ஹிட்லரும், இத்தாலியில் முசோலினியும்,  பாசிச, நாசிச சக்திகள் அழிவு செயலில் ஈடுபட்டன. 1942 ஆகஸ்ட் 6, 8 தேதிகளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது.

    நாஜி முகாம்களில் யூதர்கள் சிறை வைக்கப்பட்டு கொடூரமான சித்ரவதைக்குள்ளாயினர். கட்டாயக் கருத்தரிப்பு, கட்டாயக் கருக்கலைப்பு, விஷப்புகை கிடங்கில் உயிர்வதை செய்தல் போன்ற மனித குலம் வெட்கி தலைகுனியும் மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. இப்பின்னணியில் தான் மனித உரிமை பிரகடனம் வடிவம் பெற்றது. 1948 டிசம்பர் 10-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை கூடி சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை  வெளியிட்டது.

 

Post a Comment

0 Comments