மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் TNPSC Moovalur Ramamirtham

Moovalur Ramamirtham Ammaiyar 
TNPSC Exam Study Notes


  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833ஆம் ஆண்டு பிறந்தார்.
  • தேவதாசி குடியில் பிறந்தார்.
  • தேவதாசி (இசை வேளாளர்) குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. 
  • ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஒதுக்கி வைத்தனர்.
  • தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பததையும், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
  • காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1925ம் ஆண்டு மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டினார்.
  • இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை (அல்லது) மதி பெற்ற மைனர், தாசிகளின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
  • தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம், தமிழக பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவில் பெண்கள் விழிப்படையச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது.
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் காந்தியடிகள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
  • ஆங்கிலேயர்களின் தடை உத்தரவு காரணமாக தான் பேசாமல், தனது கருத்துக்களை கரும்பலகையில் எழுதி வெளிப்படுத்தினார்.
  • காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என காந்தியடிகள் கூறியதை அடுத்து, அம்மையார் தனது ஓட்டு வீட்டை விட்டு குடிசையில் குடியேறினார்.
  • அக்குடிலின் வெளியே, கரும்பலகையில் “கதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்” என எழுதி இருந்தார்.
  • 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.
  • அறிஞர் அண்ணா அவர்களால் “தமிழகத்தின் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டவர்.
  • 1989ஆம் ஆண்டு மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை, இவரது பெயரால் 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்' தமிழக அரசு வழங்கி வருகிறது.
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்