திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதி முனிவர்

10th Tamil - திருவிளையாடற்புராணம்  (பரஞ்சோதி முனிவர்
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள் 

நூல் வெளி

  • திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
  • இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது.
  • பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்; பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; சிவபக்தி மிக்கவர்.
  • வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.
சொல்லும் பொருளும்
கேள்வியினான் – நூல் வல்லான் 
கேண்மையினான் – நட்பினன்
தார் - மாலை
முடி - தலை
முனிவு - சினம்
அகத்து உவகை - மனமகிழ்ச்சி
தமர் – உறவினர்
நீபவனம் – கடம்பவனம்
மீனவன் – பாண்டிய மன்னன்
கவரி – சாமரை (கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)
நுவன்ற – சொல்லிய
என்னா – அசைச் சொல்

இலக்கணக் குறிப்பு
கேள்வியினான் – வினையாலணையும்பெயர்
காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
பகுபத உறுப்பிலக்கணம்
தணிந்தது - தணி + த்(ந்) + த் + அ + து
தணி - பகுதி
த் - சந்தி
த்(ந்) - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - சாரியை,
து - படர்க்கை வினைமுற்று விகுதி

சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன்
ஏடாளும் புலவரொருவர் நாடாளும் மன்னரைக் காண அரண்மனை சென்றார். களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தார்; அரச குற்றமான அச்செயலைச் செய்த புலவருக்குத் தண்டனை வழங்காமல் கவரி வீசினார் மன்னர். உறங்கிய புலவர் மோசிகீரனார். கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. கண்விழித்த புலவர் மன்னரின் செயலைக் கண்டு வியந்து பா மழை பொழிந்தார். அப்பாடல் "மாசற விசித்த வார்புறு வள்பின் ..." புறம் 50

கருத்துரையிடுக

0 கருத்துகள்