வினா, விடை வகைகள் | 10th Tamil tamil ilakkanam

10th Tamil tamil ilakkanam
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள் 

வினாவகை
அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்று வினா ஆறு வகைப்படும்.
அறிவினா
தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.
மாணவரிடம், 'இந்தக் கவிதையின் பொருள் யாது?' என்று ஆசிரியர் கேட்டல்.

அறியா வினா
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது.
ஆசிரியரிடம், 'இந்தக் கவிதையின் பொருள் யாது?' என்று மாணவர் கேட்டல்.

ஐய வினா
ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.
'இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?' என வினவுதல்.

கொளல் வினா
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.
'ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?' என்று நூலகரிடம் வினவுதல்.
கொடை வினா
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது.
'என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?' என்று கொடுப்பதற்காக வினவுதல்.

ஏவல் வினா
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.
"வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை 
ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்
-நன்னூல்,385

"சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் 
உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் 
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி 
நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப"
நன்னூல்,386

விடை வகைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்