விடை வகைகள் | தமிழ் இலக்கணம்

10th Tamil tamil ilakkanam | TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான  முக்கிய தேர்வுக்குறிப்புகள் 


விடை வகைகள்
சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும்.

முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.
சுட்டு விடை
சுட்டிக் கூறும் விடை
'கடைத்தெரு எங்குள்ளது?' என்ற வினாவிற்கு, வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்.

மறை விடை
மறுத்துக் கூறும் விடை
''கடைக்குப் போவாயா' என்ற கேள்விக்குப் 'போகமாட்டேன்' என மறுத்துக் கூறல்.

நேர் விடை
உடன்பட்டுக் கூறும் விடை 
'கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல்.

ஏவல் விடை
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.
"இது செய்வாயா?" என்று வினவியபோது, "நீயே செய்" என்று ஏவிக் கூறுவது

வினா எதிர் வினாதல் விடை
வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.
'என்னுடன் ஊருக்கு வருவாயா?' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது.

உற்றது உரைத்தல் விடை
வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல்,
'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது.
உறுவது கூறல் விடை
வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக்கூறல்.
'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது.

இனமொழி விடை
வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல். 
"உனக்குக் கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது.

வினா வகைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்