10th Tamil - நிகழ்கலை பாடத்திலிருந்து
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
கரகாட்டம்
- பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.
- 'கரகம்' என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்.
- இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர்.
- தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர். இதற்கு நையாண்டி மேள இசையும் நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு.
0 கருத்துகள்