நிகழ்கலை | ஒயிலாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம்

 10th Tamil - நிகழ்கலை பாடத்திலிருந்து 
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான  
முக்கிய தேர்வுக்குறிப்புகள் 


ஒயிலாட்டம்
  • ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம். 
  • உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும் சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும். இதில் கம்பீரத்துடன் ஆடுதல் என்பது தனிச்சிறப்பானது.
  • ஒயிலாட்டத்தை இருவரிசையாக நின்றும் ஆடுகின்றனர். ஒருவருக்கொருவர் இடம்விட்டு விலகிநின்று ஆடும் இந்த ஒயிலாட்டத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது. ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு. 
  • இந்த ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தேவராட்டம்
  • தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. 
  • இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். 
  • உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் 'தேவதுந்துபி', தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி. 
  • இந்தக் கலை, வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது. 
  • இவ்வாட்டத்தில் பெரும்பான்மையாக எட்டு முதல் பதின்மூன்று கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.
  • தேவராட்டம் குறிப்பாகச் சடங்கு சார்பாக ஆடப்படுகின்றது.
சேர்வையாட்டம்
  • தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை, சேர்வையாட்டம்.
  • ஆட்டக்கலைஞர்கள் சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே ஆடுகின்றனர். இதனை இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்