10th Tamil - நிகழ்கலை பாடத்திலிருந்து
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
மயிலாட்டம்
- மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.
- நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.
- கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
- ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.
காவடியாட்டம்
- கா-என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள்.
- இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.
- மரத்தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி, மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர். அந்த அரைவட்டப்பகுதியைப் பட்டுத்துணியால் மூடி அழகுபடுத்துகின்றனர். மேலும் மயிலிறகுக் கற்றைகளை இருபுறமும் பொருத்தி, மணிகளால் அழகுபடுத்திக் காவடியை உருவாக்குகின்றனர்.
- காவடியின் அமைப்புக்கேற்ப மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர்.
- இலங்கை, மலேசியா உட்பட, புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
0 கருத்துகள்