நிகழ்கலை | பொய்க்கால் குதிரையாட்டம்

 10th Tamil - நிகழ்கலை பாடத்திலிருந்து 
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான  
முக்கிய தேர்வுக்குறிப்புகள் 


பொய்க்கால் குதிரையாட்டம்:
  • "போலச்செய்தல்" பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. 
  • மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம்.
  • அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. 
  • இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
  • கலைஞர்கள் தங்கள் கால்களை மறைக்கும் உயரத்திற்குத் துணியைக் கட்டிக் கொள்கின்றனர். காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர். 
  • குதிரைமேல் ஏறிப் பயணம் செய்வது போன்று கடிவாளத்தை ஆட்டியும் காலை உயர்த்தியும் நான்கு புறமும் ஓடியும் ஆடுகின்றனர்.
  • பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப் பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
  • நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன. இது இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்