நிகழ்கலை | புலி ஆட்டம், தெருக்கூத்து

10th Tamil - நிகழ்கலை பாடத்திலிருந்து  
TNPSC, TN Police, TNTET ஆகிய 
போட்டித்தேர்வுகளுக்கான முக்கிய தேர்வுக்குறிப்புகள் 

புலி ஆட்டம்

  • தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
  • பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று. 
  • விழாக்களில் புலிவேடமிடுவோர் உடம்பெங்கும் புலியைப் போன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக்கோடுகளையிட்டுத் துணியாலான வாலை இடுப்பில் கட்டிக் கொள்வர். 
  • தப்பு மேளத்திற்கேற்ப ஒருவரோ, இருவரோ ஆடுவர். 
  • புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக்குதித்தும் நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப்பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை வெளிப்படுத்துகின்றனர்.

  • தெருக்கூத்து

    • நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர், அது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. 
    • கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது.
    • திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது.
    • களத்துமேடுகளில் நிகழ்த்தப்பட்ட தெருக்கூத்து, தெருச் சந்திப்புகளிலும் நிகழ்த்தப்படுகிறது; பின்னர்க் கோவில் சார்ந்த கலையாகவும் ஆக்கப்பட்டது.
    • இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். 
    • திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது. 
    • தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. 
    • அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது.
    • கூத்துக்கலைஞர், கூத்தைக் கற்றுக்கொடுப்பவர் ஆகியோரின் அடிப்படையிலும் காலம். இடம் போன்றவற்றின் அடிப்படையிலும் கூத்து நிகழ்த்தப்படுவதில் சிறுசிறு மாறுபாடுகள் உள்ளன. 
    • தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது. 
    • இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


    கருத்துரையிடுக

    0 கருத்துகள்