ஏலாதி

  • மருந்தால் பெயர் பெற்ற நூல்
  • ஏலாதி என்பதற்கு ‘ஏலத்தை முதலாக உடையது’ என்று பொருள்
  • ஏலம், இலவங்கம், சிறு நாவற் பூ (தக்கோலம்/ நாககேசரம்) சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறும் ஏலாதி எனப்படும்
  • மொத்தம் 80 பாடல்கள் உள்ளன.
  • ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
  • மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த நூல்கள் இரண்டு.
    1) ஏலாதி,   2) திரிகடுகம்.
  • ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியார்
  • திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு.
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவர் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்
  • முற்பிறவியில் மாணவர்களுக்கு உணவு, உடை, எழுத்தாணி, புத்தகம் போன்றன கொடுப்போர் இப்பிறவியில் புலவர் போற்றும் வண்ணம் வாழ்வர். 
  • மேற்கோள்

    “தாய் இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி

    வாய்இழந்த வாழ்வினார், வணிகம் போய்இழந்தார்

    கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்கு ஈந்தார்

    வைத்து வழங்கிவாழ் வார்”

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்