கம்பராமாயணம்

  • இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. 
  • வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தை தழுவி கம்பர் தமிழில் இயற்றியதே கம்பராமாயணம் ஆகும்.
  • இராமாயணம் ஆதிகாவியம், கம்ப நாடகம், கம்பசித்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கம்பராமாயணம் 6 காண்டங்களையும், 118 படலங்கள், 10589 பாடல்களை கொண்டது.
  • பாலகாண்டம், அயோத்திய காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்த காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்ற ஆறு காண்டங்களை உடையது.
  • அயோத்தியா காண்டம் 13 படலங்களை கொண்டது.
  • பெரும் பிரிவு - காண்டம், உட்பிரிவு - படலம்
  • கம்பராமாயணத்தின் பாடல் வகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
  • அயோத்தியா காண்டத்தில் குகப்படலம் 7ஆம் படலமாகும். குகப்படலத்தைக் கங்கை படலம் எனவும் கூறுவர்.
  • ஒட்டக்கூத்தர் உத்தர காண்டத்தை இயற்றினார். இது கம்பராமாயணத்தின் 7வது காண்டமாகும்.
  • சுந்தர காண்டம் இராமாயணத்தின் முடிமணியாக திகழ்கிறது.

ஆசிரியர் குறிப்பு - கம்பர்

  • கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பர்
  • காலம் : 12 ஆம் நூற்றாண்டு
  • இயற்றிய நூல்கள் :  கம்பராமாயணம், சடகோபரந்தரதி (நம்மாழ்வார் பற்றியது), ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது
  • சிறப்பு பெயர்கள் : கவிசக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிபேரரசர், கம்பநாடன், கம்ப நாட்டாழ்வான்.
  • சமகாலத்தவர்கள் : புகழேந்தி புலவர், ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் இவர் சமகாலத்தவர். இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார்.
  • ஆதரித்தவர் : திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். இவரை பற்றி இராமாயணத்தில் 1000 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பத்து கவிகளில் பாடியுள்ளார்
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்