Kamba Ramayanam | கம்பராமாயணம் குறிப்பு
- இராமாயணத்திற்கு கம்பர் இட்டபெயர் இராமாவதாரம். இது கம்பநாடகம், கம்பசித்திரம் எனவும் கூறப்படுகிறது.
- திருவெண்ணெய்நல்லூர், திருவொற்றியூர் போன்ற இடங்களில் இராமாயணத்தை பாடி, பின்பு திருவரங்கத்தில் அரங்கேற்றினார்.
- "விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன்" எனக் கூறியவர் - திருத்தக்கத்தேவர்
- இராமாயணத்தில் இரணியன் வதைப் படலம், மாயாசனகப் படலமும் சிறந்தது.
- தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலையை அடைந்தது.
- கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது
- தொல்காப்பிய நெறி நின்றவர் கம்பர். வடமொழிகளை நீக்கி தமிழ்படுத்தியவர்.
- "யாமறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவனை போல் இளங்கோவை போல்...." என்று பாரதியார் கம்பரை பாராட்டியுள்ளார்.
- அயோத்தியின் மன்னன் தசரதனுக்கு மக்கள் நால்வர் - ராமன், பரதன், இலக்குவன், சத்ருகனன்
கைகேயின் மனதை கெடுத்தவள் மந்தரைதசரதன் மனைவிகள் - கோசலை, கைகேயி, சுமத்திரை.கோசலை - இராமன், கைகேயி - பரதன், சுமத்திரை - இலக்குவன், சத்ருகனன்கைகேயின் வேலையாள் - கூனிதிரிசடை - அசோகவனத்தில் காவல் காத்த அரக்கிஇந்திரஜித் - இராவணனின் மகன் இவனின் மற்றொரு பெயர் மேகநாதன்சூர்பனகை - இராவணனின் தங்கைதாடகை - சுக்ரிவனின் மனைவிவிபிசனன் - இராவணனின் தம்பிகும்பகர்ணன் - இராவணனின் தம்பிமண்டோதரி - இராவணனின் மனைவிகுகன் காங்கையாற்றுத் தோணிதுறைக்கும், 1000 படகுகளுக்கும் தலைவன்குகன் சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழும் தலைவன்நெடியவன்- உயர்ந்தவனாகிய இராமன்அன்னவன் - குகன்பண்ணவன் - நற்குணங்கள் உடைய இலக்குவன்.இராமன் கோதண்டம் என்னும் வில்லேந்தியவன்.அனுமன் சிறிய திருவடி என்றும்இ சுந்தரன் என்றும் அழைக்கப்படுகிறார்.இராமன் அனுமனிடம் கணையாழியையும், சீதை அனுமனிடம் சூடாமணியையும் வழங்கினர்.திருவடி தொழுதபடலம் உள்ள காண்டம் சுந்தர காண்டம்.திருவடி தொழுதபடலம் என்பது அனுமனுடைய கூற்று."எல்லாவற்றிலும் இனிய நண்பனே இவ்விடத்தில் என்னுடன் இருப்பாயாக" என்று குகனை நோக்கி இராமன் கூறியது.உத்திரபிரதேசத்தில் பாயும் நதி சரயு.பிறை நிலவு போல் நெற்றி உடையவள் சீதை.தாமரை போன்ற கண்களை உடையவன் இராமன்.இராமன் பிரிவால் அனலிலிட்ட மெழுகுபோல் துன்பமடைந்தவர்கள் அந்தணர்கள்.கற்போருக்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது. பொருள், அணி, நடையால் சிறந்த நூல் கம்பராமயணம்.திருக்குறளும், கம்பராமயணமும் தமிழுக்கு கதி என்பர் பெரியோர்கள்."உலகில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும், இராமாயணமும் இருந்தால் போதும் அதனை மீண்டும் புதுப்பித்துவிடலாம்" - கால்டுவெல்.
10th Tamil - தமிழ்ப் பாடத்திலிருந்து
0 கருத்துகள்