குற்றியலிகரம், குற்றியலுகரம், முற்றியலுகரம்

சமச்சீர்க்கல்வி தமிழ்ப்பாடத்திலிருந்து தொகுக்கப்பட்ட
TNPSC, TET, PGTRB, UGTRB, TN Police Exams
முக்கிய தேர்வுக்குறிப்புகள்

எழுத்து இரண்டு வகைப்படும்.
1. முதலெழுத்து,  2. சார்பெழுத்து

உயிர் எழுத்து 12ம் மெய் எழுத்து 18ம் முதலெழுத்துகள் எனப்படும் (முதலெழுத்துகளின் எண்ணிக்கை 30)

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
1. உயிர்மெய், 
2. ஆய்தம், 
3. உயிரளபெடை, 
4. ஒற்றளபெடை, 
5. குற்றியலிகரம், 
6. குற்றியலுகரம், 
7. ஐகாரக்குறுக்கம், 
8. ஒளகாரக்குறுக்கம், 
9. மகரக்குறுக்கம், 
10. ஆய்தக்குறுக்கம் 
எனச் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

குற்றியலிகரம், குற்றியலுகரம் குறித்து இங்கு காண்போம்.

குற்றியலுகரம்

குறுமை+இயல்+உகரம்=குற்றியலுகரம்
குறுமை என்றால் குறுகிய என்பது பொருள்.
இயல் என்றால் ஓசை என்பது பொருள்.
உகரம் என்றால் உ என்னும் எழுத்து
குறிலுக்கு 1 மாத்திரை
நெடிலுக்கு 2 மாத்திரை
மெய்க்கு 1/2 மாத்திரை

உகரம் குறில் எழுத்து ஆதலால் ஒரு மாத்திரைக் கால அளவு ஒலிக்க வேண்டும். ஆனால், உகரம் ஒரு மாத்திரையளவில் ஒலிக்காமல் சில சொற்களில் அரை மாத்திரைக் கால அளவே ஒலிக்கும். அவ்வாறு ஒலிப்பதனை குற்றியலுகரம் என்பர்.
சில சொற்களுக்கு இறுதியில் ஆறு வல்லினமெய் எழுத்துகளுடன் உகரம் சேர்ந்து வரும்போது, அந்த உகரம் அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.
க்+உ=கு         ச்+உ=சு
ட்+உ=டு        த்+உ=து
ப்+உ=பு        ற்+உ=று

பசு, காடு ஆகிய சொற்களை ஒலித்துப் பாருங்கள். ‘பசு’ எனச் சொல்லும்பொழுது அச்சொல்லில் உள்ள ‘சு’ ஒலியானது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும். ‘காடு’ என்னும் சொல்லை ஒலிக்கும் பொழுது அச்சொல்லில் உள்ள ‘சு’ ஒலி அதற்குரிய ஒரு மாத்திரையளவு ஒலிக்காமல் குறைந்து ஒலிப்பதனை உற்றுக்கேட்டால் அறியலாம். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே குற்றியலுகரம் ஆகும்.

கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச்சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.

சொல்லின் ஈற்று அயலெழுத்து அடிப்படையாகக்கொண்டு குற்றியலுகரம் அறுவகையாகப் பிரிப்பர்.

அவை,
1. நெடில்தொடர்க் குற்றியலுகரம்,
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வல்லினத்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்