இராவண காவியம் | Ravana Kaviyam

9ஆம் வகுப்பு தமிழ்ப்பாடபுத்தகத்தில் இராவண காவியத்தில்
தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

பாலை
மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ 
இன்னிளம் குருளைமிக்கு இனைந்து வெம்பிடத் 
தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
நன்னரில் வலியசெந் நாய்உயங் குமே (65)

கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார் 
படிக்குற எருத்துக்கோடு அன்ன பாலைக்காய் 
வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் 
அடிக்கும் ஓசையின்பருந்து அஞ்சி ஓடுமே (67)

சொல்லும் பொருளும்: 
வாய்வெரீஇ - சோர்வால் வாய் குழறுதல்; 
குருளை - குட்டி; 
இனைந்து - துன்புறுதல்; 
உயங்குதல் - வருந்துதல். 
படிக்குஉற - நிலத்தில் விழ; 
கோடு - கொம்பு.
மருதம்

கல்லிடைப் பிறந்த ஆறும்
          கரைபொரு குளனும் தோயும் 
முல்லைஅம் புறவில் தோன்று
          முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
          நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
          வஞ்சியும் மருதம் பூக்கும்    (72)

மரைமலர்க் குளத்தில் ஆடும் 
          மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட
பொருகரிக் குருத்து அளந்து
          பொம்மெனக் களிப்பர் ஓர்பால்
குரைகழல் சிறுவர் போரில்
          குலுங்கியே தெங்கின் காயைப்
புரைதபப் பறித்துக் காஞ்சிப்
          புனைநிழல்அருந்து வாரே.   (77)

சொல்லும் பொருளும்: 
கல்-மலை; 
முருகு- தேன், 
மணம், அழகு; 
மல்லல்- வளம்; 
செறு- வயல்; 
கரிக்குருத்து- யானைத்தந்தம்; 
போர்- வைக்கோற்போர்; 
புரைதப- குற்றமின்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்