Experience of TNPSC Group 2 Interview Post

குரூப் 2 இன்டர்வியூ போஸ்ட் வென்ற எழிலரசனின் அனுபவங்கள்
நான் கடந்த 4 ஆண்டுகளாகத் TNPSC போட்டி தேர்வில் 5 முறை வாய்ப்பை இழந்துள்ளேன்.

Group 2A, 2 முறை
Group 4, 2 முறை
Group 2 ,1 முறை

இவற்றில் எல்லாம் 3 மதிப்பெண் தவற விட்டேன். ஒவ்வொரு முறையும் எனக்கு மன அழுத்தம், நெஞ்சுவலி, வீட்டில் கேலி்-கிண்டல், நண்பர்களின் அவநம்பிக்கை, ஏமாற்றம் இவற்றை எல்லாம் சந்தித்துள்ளேன்.

என் நண்பர்கள் மாநில அளவில் 27, 240, 500, 1222, 1300 என தரவரிசை பெற்று வேலையில் உள்ளனர், எனக்கு வேலை இல்லை. ஆனால் திறமையில்லாதவன் என என்னை நினைத்துள்ளனர்.

அவரகளின் நினைப்பைத் தவிடு பொடியாக்கி நான் இன்று group 2 interview. Local fund audit inspector பதவியினை தேர்வு செய்து உள்ளேன்.

ஆனால் என் நண்பர்கள் யாருக்கும் எந்த பதவியும் கிடைக்கவில்லை.

அவர்களுக்கு objective முறை எளிதாக இருக்கும், ஆனால் Descriptive முறை கடினமான இருக்கும்.

ஆனால் எனக்கு Descriptive முறை எளிதாக இருந்தது.

1) முதல்நிலை 2) முதன்மை. 3) நேர்காணல்,, இந்த முறையில் முதலில் (Prelim) அதிக மதிப்பெண் பெறுபவரால் முதன்மை தேர்வில் பெற இயலவில்லை.

நேர்காணலில் முமுமை பெற இயலவில்லை.

நான் முதல்நிலை தவிர்த்து மற்ற இரண்டும் சிறந்த மதிப்பெண் பெற முடிந்தது.

group 2 interview 30/30 மதிப்பெண் பெற்றேன்,, மற்றவர்கள் 18 & 21.

இன்று என் நண்பர்கள் அனைவரையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளேன். , சம்பள விகித்திலும் முதலிடம்.

அண்ணே, எங்கள் கிராமம் சிறிய ஊர், 50 வீடுகள், 200 பேர்,, அனைவரும் விவசாய மக்கள்,,2 போலீஸ்,, 2 ஆசிரியர்,, 1 TNPSC officer அது நான்.

அன்புடன்,
எழிலரசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்