Group 4 Online Certificate Verification - சந்தேகங்களுக்கான பதில்கள்

குரூப்-04 ஆன்-லைன் சான்றிதழ் சரி பார்ப்பு சந்தேகங்களுக்கான பதில்கள்



1. பிறந்த தேதிக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை உபயோகப் படுத்தலாம். தனியாக, பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை.

2. தற்சமயம் பட்ட படிப்பிற்கு என கண்டிப்பாக CONVOCATION OR PROVISIONAL CERTIFICATE ல் ஏதேனும் ஒன்றைக் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரச பணியாளர் தேர்வாணையம் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் அறிவுறுத்தி உள்ளது.

நீங்கள் விண்ணப்பத்தில் CONSOLIDATED MARK SHEET விபரத்தினைக் கொடுத்து இருப்பின் , கவலை இல்லை. பட்டப் படிப்பிற்கு CONVOCATION CERTIFICATE OR PROVISIONAL CERTIFICATE இரண்டில் எது உங்களிடம் இருக்கிறதோ அதனைக் கொடுக்கலாம்.

PROVISIONAL ஐ விட CONVOCATION பதிவேற்றம் செய்வது மிக நன்று.

அதே சமயம், நீங்கள் விண்ணப்பத்தில் கொடுத்து இருந்த CONSOLIDATED MARK SHEET சான்றிதழை "Others" என்று ஒரு FOLDER இருக்கும். அதில் கூடுதலாக பதிவேற்றம் செய்யலாம்.

இந்த CONSOLIDATED MARK SHEET சான்றிதழுக்கும், CONVOCATION OR PROVISIONAL சான்றிதழுக்கும் தேதி மற்றும் சான்றிதழ் எண் வேறு பட்டு இருந்தாலும் பரவாக இல்லை. கவலை வேண்டாம்.

ஆனால், "நான் விண்ணப்பத்தில் CONSOLIDATED MARK SHEET விபரத்தினைப் பகிர்ந்து உள்ளேன், தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவுரையின்படி CONVOCATION OR PROVISIONAL சான்றிதழை பதிவேற்றம் செய்து உள்ளேன் என்று கடிதம் எழுதி அதனையும் பதிவேற்றம் செய்வது நல்லது.

3. உங்களது தற்போதைய சாதி சான்றிதழில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்த பழைய சாதி சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்.

ஆனால், தற்பொழுதே புதிய சாதி சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்து வாங்கி வைத்துக் கொள்ளவும். அதனை பதிவேற்றம் செய்ய தேவையில்லை.

TNPSC-யில் இருந்து நீங்கள் பதிவேற்றம் செய்த சாதி சான்றிதழில் தவறு உள்ளது என்று கூறினால் மட்டுமே புதிய சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது.

அப்படி கேட்கவில்லை எனில் புதிய சாதி சான்றிதழை அடுத்த தேர்விற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. PSTM பதிவேற்றம் செய்யும் பொழுது, படத்தில் உள்ளவாறு திரு/திருமதி/செல்வி போன்ற விபரங்கள் சரியாக டிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

அந்த சான்றிதழ் எந்த நிறத்தில் எழுதப்பட்டு உள்ளதோ அந்த நிறத்தில் டிக் செய்ய வேண்டும். பச்சை என்றால் பச்சை, ஊதா என்றால் ஊதா, கருப்பு என்றால் கருப்பு.

"has/has not obtained any scholarship" எது இருந்தாலும் அதனால் பின்னடைவு இல்லை. கவலை வேண்டாம். பெரும்பாலானோருக்கு ஸ்காலர்ஷிப் இருப்பது இல்லை. உங்களதுக்கு இருக்கிறதா? இல்லையா? என்று மாற்றுச் சான்றிதழில் (TC) குறிப்பிட்டு இருப்பார்கள். அதனைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். டிக் எதுவுமில்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டாம்.

தமிழ் வழிக்கு என மாற்றுச் சான்றிதழை (TC) விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தால் அதில் "Medium of Instruction: Tamil" என்று ஒரு வரி இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், இப்பொழுது TNPSC புதிதாக கொடுத்துள்ள படிவத்தில் PSTM சான்றிதழ் வாங்கி பதிவேற்றம் செய்யலாம். ஆனால், ஆனால், இதற்க்கு கடிதம் எழுதி அதனையும் பதிவேற்றம் செய்வது சிறப்பு..

5. தட்டச்சு இளநிலை முடிக்காமல், நேரடியாக முதுநிலை மட்டும் முடித்து இருந்தால் SENIOR GRADE சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது.

தட்டச்சர் பதவிக்கு, இளநிலை முடித்து விட்டுத்தான், முது நிலை முடிக்க வேண்டும் என்ற விதி இல்லை. அவர்களுக்குத் தேவை முதுநிலை சான்றிதழ்கள் மட்டுமே.

உங்களிடம், இளநிலை மற்றும் முது நிலை இரண்டிற்கும் சான்றிதழ்கள் இருந்தால் இரண்டையும் பதிவேற்றம் செய்யவும்.

6. மாற்றுத் திறனாளிகள் கண்டிப்பாக அதற்க்கு உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உரிய மருத்துவக் குழுவிடமிருந்து (மூன்று உறுப்பினர் அடங்கிய மருத்துவக்குழுமத்தில் பெறப்பட்ட சான்றிதழ் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. அதில் உடல் ஊனத்தின் தன்மை, சரியான விழுக்காடு (with percentage of disability) மற்றும் அவரது உடல் ஊனம் அவருடைய பணிகளைத் திறம்பட செய்வதில் அவருக்குத் தடையாக இருக்காது என்று கருதுவதாகவும் மருத்துவ குழுமத்தால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.)

இந்த சான்றிதழ் தேவைப்படுவோர் இதற்க்கு என்று தனியாக உள்ள எனது பதிவினைப் பார்த்து மாற்றுத் திறனாளிக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

7. ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்று (Destitute Widow), (விளக்கம்: “ஆதரவற்ற விதவை” என்பது அனைத்து வழியிலிருந்தும் கிடைக்கப் பெறும் மொத்த மாத வருமானமாக ரூ.4000/-ஐ (ரூபாய் நான்காயிரம் மட்டும்) மிகாத தொகை பெறுகின்ற ஒரு விதவையைக் குறிப்பதாகும்.

இவ்வருமானம் குடும்ப ஓய்வூதியம் (அ) மற்ற வருமானங்கள் (தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈட்டும் வருமானம் உட்பட) எவையேனுமிருப்பின் அவற்றையும் உள்ளடக்கியதாகும்). இத்தகைய விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் / உதவி ஆட்சியர் / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற வேண்டும். விவாகரத்து பெற்றவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார்.
8. விண்ணப்பத்தாரர் முன்னாள் இராணுவத்தினர் எனில் அன்னாரின் PPO மற்றும் Bonafide சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. (முன்னாள் இராணுவத்தினரின் மனைவி/மகன்/மகள் – முன்னாள் இராணுவத்தினராக கருதப்பட மாட்டார்.)

9. மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், மற்றும் ஆதரவற்ற விதவைகள் சலுகைகளை பெற விழைவோர் கண்டிப்பாக அதற்குரிய சான்றிதழை உரிய அறிவுரைப்படி பதிவேற்றம் செய்யவேண்டும்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யவில்லை எனில், விண்ணப்பத்தில் நீங்கள் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் அல்லது ஆதரவற்ற விதவை என்று குறிப்பிட்டு இருந்தாலும் உங்கள் சலுகையை இழக்க நேரிடும்.

10. விண்ணப்பத்தாரர் திருநங்கையெனில் திருநங்கைக்கான ID Card மற்றும் அரசாணைகள் 1) G.O.(MS) No.28, BC, MBC, and Minorities Welfare (BCC) Department Dated: 06.04.2015, 2) G.O.(MS) No.90, Social Welfare and Nutritious Meal Programme (SW8(2)) Department Dated:22.12.2017 - படி சாதி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் திருநங்கை விண்ணப்பத்தாரரை ஆண் இனத்தவராக கருத வேண்டுமா அல்லது பெண் இனத்தவராக கருத வேண்டுமா என்பதற்கான விருப்ப கடித நகல் ஒன்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

11. இந்த தேர்விற்கான அறிவிக்கை தேதிக்குப்பிறகு அரசுப்பணியில் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் அவர்களது பணி விவரங்கள் (பணியில் சேர்ந்த நாள், பணிபுரியும் துறை/ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா/NOC வழங்கப்பட்டுள்ளதா) எழுத்துப்பூர்வமாக தெரிவித்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதாவது தடையின்மைச் சான்றிதழை தற்போது பதிவேற்றம் செய்யத் தேவை இல்லை, ஆனால், நீங்கள் அரசுப் பணியில் உள்ளீர்கள் என்ற விவரத்தினை கடிதம் மூலம் தயார் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

12. தடையின்மைச் சான்றிதழ் (NOC) மற்றும் “அ” மற்றும் “ஆ” நிலை (Group ‘A’ or ‘B’) அரசு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் ஆகியவை அன்னார் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுமாயின் அச்சமயத்தில் அளித்தால் போதுமானது. தற்சமயம் பதிவேற்றம் செய்ய தேவையில்லை.

13. எனக்குத் தெரிந்த வரை, தட்டச்சர், இளநிலை உதவியாளர் இரண்டிற்கும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என்று அழைக்கப்பட்டவர்கள் ஒரு முறை சான்றிதழை பதிவேற்றம் செய்தால் போதுமானது. கண்டிப்பாக இதுகுறித்த அறிவுரை ஊழியர்களுக்கு பகிரப்பட்டு இருக்கும். அவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டு பதிவேற்றம் செய்யவும்.

14. என்னிடம் உள்ள மாற்றுச் சான்றிதழில் எனது நன்னடத்தைச் சான்றிதழ் உள்ளது, நான் தனியாக இறுதியாக படித்த நிறுவனத்தில் வாங்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு, அதனை, கலோரிக்கு அல்லது பள்ளிக்குச் சென்று வாங்குவதை விட உங்களுக்கு வேறு என்ன முக்கியமான வேலை என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் படித்த நிறுவனம் தொலைவில் இருந்தாலும், அங்கும் ஒரு சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சான்றிதழ் ஒரு முறை வாங்கினால் போதும், இறுதி வரை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படுத்தலாம்.
15. VERY IMPORTANT:
விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்ளுக்கு விண்ணப்பதாரரிடம் ஏதேனும் சான்றிதழ் இல்லாவிட்டாலோ அல்லது தாங்கள் விண்ணப்பத்தில் தவறான தகவல் தந்து அதற்குறிய சான்றிதழ் இல்லையென்றாலோ அதற்கான கடிதம் ஒன்றை எழுதி அதனை scan செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். .

16. கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை நன்கு படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும். இதில் கூறப்படாத விபரங்களில் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம். ஏற்கனவே, தெளிவாகப் பகிரப்பட்ட விபரங்களையே மீண்டும் மீண்டும் கேட்டு என்னுடைய நேரத்தையும், உங்கள் நேரத்தையும் விரயமாக்க வேண்டாம். உங்களது கேள்விகளுக்காக காத்து இருக்கிறேன்.

கேள்விகளை இன்பாக்ஸில் கேட்காமல் கமெண்டில் கேட்கவும். மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

17.அப்புறம் இந்தப் பதிவை அப்படியே காபி அடித்து என் பெயரை எடுத்துட்டு, உங்க பெயரை அல்லது உங்க இன்ஸ்டிடியுட் பெயரை போட்டு பதிவு பண்ற நேரத்துல, இதுல சொல்லாதது ஏதாவது இருந்தா அதையும் சேர்த்து சொல்லுங்க.
எங்களுக்கும் உதவியாக இருக்கும்.

இந்த விபரத்தினைப் பலருக்கும் பயனுள்ள வகையில் பகிரவும்.

நன்றி.

அன்புள்ள,
அஜி, சென்னை

For more tnpsc information Pl visit www.ajitnpsc.com

கருத்துரையிடுக

0 கருத்துகள்