6ம் வகுப்பு அறிவியல் - உயிரியல் வினா விடைகள்

தாவரங்களின் உலகம் & உணவு முறைகள்

1. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை....? கீழா நெல்லி

2. இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என அழைக்கப்படும் மாநிலம்....? கேரளா

3. தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழை....? நார்
4. வாழை நார் , சணல் நார் போன்றவை.....? தண்டு நார்கள்..

5. இழை நார்களுக்கு எடுத்துக்காட்டு....? கற்றாழை, அன்னாசி

6. மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு....? பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு

7. சணலில் 85% உள்ள பொருள்....? செல்லுலோஸ்

8. தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி.....? வன்கட்டை

9. தாவரங்களுக்கு வலிமையையும், கடினத்தன்மையையும், உறுதியையும் அளிப்பது....? 
வன்கட்டை

10. மாட்டு வண்டியின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் மரம்....? 
கருவேல மரம்

11. கிரிக்கெட் மட்டைகள் செய்ய பயன்படும் மரம்....? 
வில்லோ

12. ஹாக்கி மட்டைகள் செய்ய பயன்படும் மரம்...? 
மல்பரி

13. டென்னிஸ் மட்டைகள் செய்ய பயன்படும் மரம்...? 
மல்பரி
14. ரயில் படுக்கைகள், படகுகள் செய்ய பயன்படும் மரம்....? பைன்

15. பழமரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது...? ஆரஞ்சு மரம் (400 ஆண்டுகள்)

16. மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம்....? ராஃப்லேசியா ( இதன் பூவின் விட்டம் 1 மீட்டர்)

17. உணவிலுள்ள, உடலுக்குத் தேவையான சத்துகள்....? ஊட்டச்சத்துகள்

18. உடலுக்கு ஆற்றல் அளிப்பவை....? கார்போஹைட்ரேட்

19. உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை....? வைட்டமின்கள்

20. உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை...? தாது உப்புகள்

21. தர்பூசணியில் உள்ள நீரின் சதவீதம்....? 99%

22. பாலில் உள்ள நீரின் சதவீதம்....? 87%

23. முட்டையில் உள்ள நீரின் சதவீதம்...? 73%

24. ஒரு ரொட்டித் துண்டில் உள்ள நீரின் சதவீதம்....? 25%

25. உருளைக் கிழங்கில் உள்ள நீரின் சதவீதம்...? 75%

26. புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்....? 
குவார்ஷியோர்கர் (1-5 வயது குழந்தைகள் ) & மராஸ்மஸ்

27. அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்....? முன் கழுத்து கழலை

28. மாலைக்கண் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் A

29. பெரி-பெரி நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் B

30. ஸ்கர்வி நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் C
31. ரிக்கெட்ஸ் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் D

32. மலட்டுத் தன்மை எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது...? 
வைட்டமின் E

33. சூரிய ஒளியின் உதவியுடன் தோளில் உருவாகும் வைட்டமின்....? 
வைட்டமின் D

34. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின்....? 
வைட்டமின் C

35. அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு....? சரிவிகித உணவு

36. தாவரங்கள் தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளுதல்...? தற்சார்பு ஊட்டமுறை ( பசுந்தாவரங்கள், யூக்ளினா )

37. உணவுக்காக பிற உயிரினங்களை சார்ந்து வாழ்தல்...? பிற சார்பு ஊட்டமுறை

38. பிற தாவரங்களை பாதிப்பிற்குள்ளாக்கி அவற்றிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெறுவது....? ஒட்டுண்ணி உணவூட்டம் 
(கஸ்க்யூட்டா)

39. கஸ்க்யூட்டா தாவரத்திற்கு ஊர்ப் புறங்களில் வழங்கப்படும் பெயர்கள்...? அம்மையார் கூந்தல் / சடதாரி / தங்கக்கொடி

40. புற ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு....? பேன், அட்டைப்பூச்சி

41. அக ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு...? 
உருளைப்புழு ( மனிதன் & விலங்குகளின் குடல் பகுதியில் வாழும் )

42. சாறுண்ணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு....? காளான்

43. நெப்பந்தஸ், டிரோசீரா, யூட்ரிகுலேரியா போன்றவை....? பூச்சி உண்ணும் தாவரங்கள்

44. உடல் பருமன் குறியீடு  (B M I ) = எடை(கிகி)/ உயரம் (மீ^2)
விலங்கியல் - பொதுவானவை
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
புதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
 
 

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection