யானைக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள்.
# யானை (கரியது)
# வேழம் (வெள்ளை யானை)
# களிறு
# களபம்
# மாதங்கம்


# கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
# உம்பர்
# உம்பல் (உயர்ந்தது)
# அஞ்சனாவதி
# அரசுவா
# அல்லியன்
# அறுபடை
# ஆம்பல்
# ஆனை
# இபம்
# இரதி
# குஞ்சரம்
# இருள்
# தும்பு
# வல்விலங்கு
# தூங்கல்
# தோல்
# கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
# எறும்பி
# பெருமா (பெரிய விலங்கு)
# வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
# பூட்கை (துளையுள்ள கையை உடையது)
# ஒருத்தல்
# ஓங்கல் (மலைபோ ன்றது)
# நாக
# பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
# கும்பி
# தும்பி
# நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
# குஞ்சரம் (திரண்டது)
# கரேணு
# உவா (திரண்டது)
# கரி (கரியது)
# கள்வன் (கரியது)
# கயம்
# சிந்துரம்
# வயமா
# புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
# தந்தி
# மதாவளம்
# தந்தாவளம்
# கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
# வழுவை (உருண்டு திரண்டது)
# மந்தமா
# மருண்மா
# மதகயம்
# போதகம்
# விரமலி
# மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
# கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.
# பிடி
# அதவை
# வடவை
# கரிணி
# அத்தினி ஆகியவை பெண் யனைகளின் பெயர்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள்.

தகவல் திரட்டியவர்: எம். அதுல்யா, வெங்கிட்ராஜ் மெட்ரிக். பள்ளி. சுல்தான்பேட்டை, சூலூர், கோவை.
நன்றி : தி இந்து (தமிழ்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்