புதிய ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகம் - மணிமேகலை

New 9th tamil book notes for TNPSC, TET, Police Exams 
மணிமேகலை - Manimegalai
  • இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம், மணிமேகலை.
  • மணிமேகலைத் துறவு என அழைக்கப்படும் நூல் மணிமேகலை
  • பௌத்த சமயச் சார்புடைய நூல்  - மணிமேகலை
  • கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்.
  • முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை ஆகும்.
  • புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த விழா இந்திரவிழா.
  • சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிற விழா இந்திரவிழா.
  • மணிமேகலையின் விழாவறை காதை, இந்திரவிழாவின் நிகழ்வுகளை கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
ஐம்பெருங்குழு :
1. அமைச்சர்
2. சடங்கு செய்விப்போர்
3. படைத்தலைவர்
4. தூதர்
5. சாரணர் (ஒற்றர்)


 எண்பேராயம் :
    1.    கரணத்தியலவர்    2.    கரும விதிகள்
    3.    கனகச்சுற்றம்     4.    கடைக்காப்பாளர்
    5.    நகரமாந்தர்    6.    படைத்தலைவர்
    7.    யானை வீரர்    8.    இவுளி மறவர்   

இலக்கணக்குறிப்பு:

தோரணவீதியும், தோமறு கோட்டியும் - எண்ணும்மைகள்.
காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகைகள்.
மாற்றுமின், பரப்புமின் - ஏவல் வினைமுற்றுகள்
உறுபொருள் - உரிச்சொல்தொடர்
தாழ்பூந்துறை - வினைத்தொகை
பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
நன்பொருள், தண்மணல், நல்லுரை - பண்புத்தொகைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்