Democracy - மக்களாட்சி Indian Constitution in tamil

மக்களாட்சி
  • ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது என்று கூறியவர் ஆபிரகாம் லிங்கன்

தேசிய கட்சிகள்:
  • இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகள் தேசியக் கட்சிகள்.

உ.ம் : காங்கிரஸ், பாரதிய ஜனதா

அரசியல் கட்சிகள்:


  • ஒருமித்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பே அரசியல் கட்சியாகும். இதை தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என இரு வகையாகப் பிரிக்கலாம்.

அரசியல் கட்சிகளின் பணிகள்:
  • பொதுக் கொள்கைகளை உருவாக்குதல்
  • தேர்தலில் போட்டியிடுதல்
  • மக்களுக்கு கல்வி அறிவு புகட்டுதல்
  • அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருத்தல்
  • அரசாங்கத்தை நடத்துவது மற்றும் விமர்சிப்பது.

ஒற்றைக் கட்சி முறையின் நன்மைகள்:
  • முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
  • செலவினங்கள் சிக்கனமாகவும் அமையும்.
  • அவசரக் காலங்களில் அல்லது ஆபத்தான காலங்களில் திறமையாகவும், சுதந்திரமாகவும் விரைவில் செயல்பட்டு ஆவணச் செய்ய முடியும்.
  • நாட்டின் பெருமைகளை பெருமளவு உயர்த்துகிறது.

ஜனநாயகத்தின் வகைகள்:
  • மக்களாட்சி முறை நேரடி மற்றும் மறைமுக மக்களாட்சி என இரு வகைப்படும்.

நேரடி மக்களாட்சி:
  • மக்கள் நேரடியாக மக்களாட்சி முறையில் பங்கேற்பர்.
  • இது பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய நாகரீகத்தில் நடைபெற்று வந்தது.
  • பண்டைய இந்தியாவில், கிராமப் பஞ்சாயத்து முறையில் நேரடி மக்களாட்சி நடைபெற்றன.

மறைமுக மக்களாட்சி:
  • இம்முறையில் மக்கள் நேரடியாக பங்கு பெறாமல் தங்கள் பிரதிநிதிகள் மூலம் பங்கு பெறுகின்றனர்.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தை உருவாக்கி நடத்துவர்.
  • பெரும்பாலான நாடுகளில் மறைமுக மக்களாட்சி முறை பின்பற்றப்படுகிறது.
  • அரசியல் கட்சிகள் ஆட்சி முறையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்