என்னைப் பற்றி... - சேகர் சுபா டி


1988 ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடித்து...

1988-89 & 1989-90 ஆகிய இரண்டு ஆண்டுகள் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் Fitter (பொருத்துநர்) பிரிவில் தேர்ச்சி...

1990 ல் Sundaram Clayton (TVS Group) நிறுவனத்தில் ரூ. 380 உதவித்தொகையில் தொழிற்பழகுநர் (Apprenticeship) பணி...

பிறகு சிறு சிறு தனியார் (சிப்காட் & சிட்கோ) நிறுவனங்களில் கடின உழைப்பில் தினக்கூலியாக தொழிலாளர்களில் ஒருவனாக பணி...

1994 ல் தென்கொரிய நிறுவனமான ஹூன்டாய் மோட்டார் கார் கம்பெனி ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையில் நிறுவப்பட்ட போது, அதன் கிளை நிறுவனமான இன்கோர் ஆட்டோ டெக் இந்தியா நிறுவனத்தில் வெல்டிங் வேலை...

இது தினக்கூலியாக ஒருநாளைக்கு  ரூ. 80 கூலியாக மாத சம்பளத்தில் பணி...

2002 ல் திருமணம்...

2004 முதல் மகவு..

2006 இரண்டாம் மகவு..

2010 ல் கடுமையான முறையில் மூன்று முறை ஹார்ட் அட்டாக்...

உடனே ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்தும், ஹோமியோபதி மருந்து உட்கொண்டு இன்றுவரை நலமாக உள்ளேன்....

அதே அண்டு 2010 ல் தொடர்ந்து 15 ஆண்டுகள் தொழில்புரிந்த இன்கோர் ஆட்டோடெக் நிறுவனம் மூடப்பட்டது...

தொடர் போராட்டம் செய்தும், வழக்கு தொடர்ந்தும் இதுநாள்வரை (24.02.2019) முடிவு எட்டப்படவில்லை...

மீண்டும் தினக்கூலியாக பல சிறு நிறுவனங்களில் கான்ட்ராக்ட் ஓனர்களிடம் வேலை செய்தேன்...

2011 ல் உற்ற உயிர் நண்பர் S.ராஜி என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் (கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகத்தை கையில் எடுத்து படிக்க வந்தேன்) TNPSC தேர்வுக்கு படிக்க அழைத்தான்.
நன்றி: ராஜி... (பிணக்கில் உள்ளான்)

2011 ல் முதல் போட்டித் தேர்வு VAO...

இதில் 178 வினா எடுத்து வெற்றியை இழந்தேன் (180 கட் ஆப்)

தோல்விக்குப் பின் மீண்டும் கான்ட்ராக்ட் ஓனரிடம் பெயின்டிங் வேலை...

பெயின்ட் அடிக்கும் வேலைக்கு அதிகாலை சென்று நள்ளிரவு 12 மணிக்கு வீடு வந்து சேருவேன்...

இரவு 12 மணி முதல் 4 மணி வரை படிப்பு...

வேலையில் கிடைக்கும் சிறு சிறு இடைவேலையில் இரவு படித்ததை நண்பர்களுக்கு குறுஞ்செய்தி (ஒரு நாளைக்கு 100 SMS வரை) மூலம் வினாக்களை கேட்டு பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்வேன்...

ஒரு வருடம் இப்படியே ஓடியது...

2012 ல் மீண்டும் கால்பர்... அது குருப் 4 தேர்வுக்கானது...

மீண்டும் கான்ட்ராக்ட்ல் பெயின்ட் அடிக்கும் வேலை உதரிவிட்டு படிக்க வந்தேன்...

2012 மூன்று 4 மாதம் குடும்பத்தை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் ரூம் வாடகை எடுத்து நண்பர்கள் நால்வருடன் குருப் ஸ்டடி....

பகல் முழுவதும் படிப்பது.  இரவு (12 வரை) முழுவது படித்ததை நண்பர்களுக்கு வகுப்பு எடுப்பது.  மீண்டும் அதிகாலை 4 மணி முதல் படிப்பு.

தினமும் காலை மாலை 100 வினாக்கள் மாடல் டெஸ்ட் எழுதிப் பழகுவோம்...

பகல் வேளையில் 10 நிமிட சிறு தூக்கம் உண்டு. இரண்டு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு படித்தோம். ஒரு வேளை உணவு கட். தேர்வு நெருங்கியது...

அந்த 2012 ஆண்டில்தான் சமச்சீர் புத்தகங்கள் வெளிவந்தது...

நான் படித்த பயிற்சி மையத்திலும் எனது அறையிலும் அனைவரும் படித்ததெல்லாம் பழைய பாடபுத்தகங்களை.  தேர்வில் எந்த புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பது யாருக்கும் தெரியவரவில்லை.

மேற்கண்ட புதிருக்கு அப்போதைய TNPSC இயக்குநர் அன்புள்ளம் கொண்ட திரு. நட்ராஜ் அவர்கள் பேட்டியில் "நன்கு படித்தவர்களுக்கு பணி நிச்சயம்" என்று பேட்டி கொடுத்தார்.

ஆனால் குருப்-4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் முதன்முதலாகப் புதிய சமச்சீர் பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டன. எழுதிய அத்துனை தேர்வர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. வினா அமைப்பும் முதல் முறையாக முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எளிமையான வினாக்கள். நான் பயிற்சி மையத்தில் (சனி, ஞாயிறு) படித்தது பழைய பாட புத்தகங்களை. அறையில் படித்தவை சமச்சீர் புத்தகங்களை....
சமச்சீர் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிவரியாக படித்து குறிப்புகள் எடுத்து படித்ததால்...எனக்கு தேர்வு எளிமையாக அமைந்தது...

அத்தேர்வில் தேர்வாணையத்தின் கீ ஆன்சர்ப்படி 148 (222.00 மதிப்பெண்கள்) வினாக்கள் சரியாக இருந்தது...

கலந்தாய்வில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது...

அரசு வேலைக்கு அடிப்படை தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்... நானோ பத்தாவது பாஸ்... ஆன்லைன் அப்பிளிகேஷேனில் +2 என்ற இடத்தில் ITI என பதிவேற்ற முடியவில்லை. டிப்ளமோ என்ற இடத்தில் ITI என பதிவு செய்ய முடிந்தது. கலந்தாய்வில் டிப்ளமோ சான்றிதழ் கேட்டதற்கு என்னிடம் அது இல்லை.  உடனே வெளியேற்றப்பட்டேன்.

அப்போதே அன்புள்ளம் கொண்ட திரு. நடராஜ் (அப்போதைய TNPSC இயக்குநர்) அவர்களை சந்தித்து என் குறையை எடுத்துக்கூறியதும், என்மீது கருணை கொண்டு தலைமைச்செயலகத்திலிந்து உடனே விசாரித்து அரசாணை ஒன்று கிடைக்கபெற நடவடிக்கைக்கு உடனே ஏற்பாடு செய்தார்கள்.

அதில் +2 படிப்புக்கு நிகரான படிப்பு எவை என ஆணையாக வெளியிடப்பட்டு இருந்தது.

அதில் டிப்ளமோ மற்றும் இரண்டாண்டு ITI தேர்ச்சி பெற்றவர்கள் +2 படித்ததற்கு சமமாக கருதி அரசுப் பணி அல்லது அரசுப்பணியில் பதவி உயர்வு வழங்கலாம் என அரசாணை அன்றைய தினம் வெளிவந்து இருந்தது.

உடனே TNPSC கலந்தாய்வில் மீண்டும் இணைந்து எனக்காக காந்திருந்த கண்ணியமிகு காவல்துறையை தேர்ந்தெடுத்தேன்.

 04.02.2013 காவல்துறையில் இளநிலை உதவியாளராக சென்னை கிண்டியில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் (CB CID Office) பணி நியமனம் பெற்று இன்று உதவியாளராக பதவி உயர்வில் காவல்துறை தலைவர் அலுவலகம், வடக்கு மண்டல அலுவலகத்தில் (ஆலந்தூர்) பணிபுரிகிறேன்.

இதில் பணிபுரிந்துகொண்டே அடுத்தடுத்து வந்த VAO மற்றும் குருப்-4 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வுக்கு செல்லாமல் பிறர் வாய்புக்காக தவிர்த்தேன்.

தற்போது வயது 46.  எனினும் 2012 முதல் குடும்பச் சுமை, பணிச் சுமை போன்ற பல வேலைகளுக்கிடையில் தொடந்து பாடப்புத்கங்களை படித்து வருகிறேன்.
நான் தேர்வு எழுத அல்ல. என் முகம் தெரியாத நண்பர்கள் பலர் தேர்வு எழுதுபவதற்காக படிக்கிறேன், பகிர்கிறேன்...
எக்ஸ்டரா தகவல்...

என்னை அலுவலகப் பணியின் போது வேலை செய்யாமல் கோச்சிங் மாஸ்டர் வேலை, பேஸ்புக்கில் பதிவிடும் வேலை என்று ஒரு புகார் என்மீது எழுப்பட்டது. அதையும் சமாளித்து பதிவிட்டு வருகிறேன்.

சென்னையிலிருந்து காஞ்சிபுத்திற்கு பணியிட மாறுதல் வேண்டி மனு செய்தேன். பணியிட மாறுதலுக்கான ஆணை வந்தபோது என்மீது வெறுப்பு கொண்ட ஒருவர் முகநூலில் TNPSC பதிவுகள் & கோச்சிங் வகுப்பு நடத்தும் தகவல்களை அளித்து டிரான்ஸ்பர் ஆடரை கேன்சல் செய்துவிட்டனர்.

இதையெல்லாம் மீறி இங்கு இன்னும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த பதிவு என்னை தங்களுக்கு தெரியப்படுத்த அல்ல. பல இன்னல்கள் வந்தபோதும் தொடர்ந்து விடா முயற்சியால் நான் அரசுப்பணிக்கு வந்துள்ளேன். அதேபோல நீங்களும் வெற்றியாளராக வேண்டும் என்ற நப்பாசைதான் எனக்கு.

அரசுப்பணி என்பது அனைவருக்கும் கிடைக்காது. ஆயிரத்தில் ஒருவருக்கு வாய்க்ககூடியது. நீங்களும் ஆயிரத்தில் ஒருவனாக ஏன் வரக்கூடாது...

+2 படிக்காமலே, டிகிரி படிக்காமலே இன்று குருப்-2 பதவியில் (Assistant) உள்ளேன்.

டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், வீஏஓ. சர்வேயர் என ஏதாவது ஒரு பணி ஆணை கிடைத்தால் போதும். உங்கள் வாழ்வு வளம்பெறும். எல்லாம் அரசுப்பணிதானே.

என் பணியை மனதார தேர்வு செய்து பணியில் கையூட்டு வாங்காமல் இன்றுவரை நேர்மையாக இருக்கிறேன்.

நீங்களும் சிறந்த அரசுப்பணியாளராக வரவேண்டும் என்பதே எனதவா.  இதனை நீண்டநாள்களாக சொல்லவேண்டும் என நினைத்தேன், சொல்லிவிட்டேன்.

என் வெற்றிக்கு அன்று உதவியவர்களை இன்றும் மறக்காமல் இருந்து வருகிறேன்.
நண்பர் திரு. S.ராஜி ( சம்பத்துராயன் பேட்டை)
குருநாதர் திரு. பன்னீர் செல்வம் சார் (காஞ்சி அகாடமி)
திரு. புத்தன் சாத்தூர் அவர்கள்
திரு. தம்பு சி அவர்கள்
திரு ஷேக் ஹுசேன் (Jana) அவர்கள்
இவர்கள் காட்டிய வழியை என்றும் மறவாமல் இன்றும் தொடர்கிறேன்....படிக்கிறேன்.

எனது பெயர் : சேகர்
மனைவி பெயர் : சுபாஷினி
என்றும் அன்புடன்

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. விடாமுயற்சியும்.தன்நம்பிக்கையும் உயர்வுக்கு வழி என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. வாழ்க. வளர்க பணி.
    என்றும் அன்புடன் சத்தியா

    பதிலளிநீக்கு