இடைக்கால பக்தி இயக்கம்

இராமானுஜர்:
  • தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்பெரும்புதூரில் தோன்றியவர்.
  • வைணவ சமயப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
  • இவரது கோட்பாடு விசிட்டாத்வைதமாகும்.
  • சரணாகதி நெறியை வலியுறுத்தி சாதி வேறுபாடின்றி அனைவரையும் முக்தி அடையத் தகுதி உடையவர் என்றார்.

மத்துவர்:
  • தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினார். 
  • இவரது இயற்பெயர் வாசுதேவன்.
  • அச்சுதப் பிரகாசரிடம் தீட்சைப் பெற்று பூரண பிரக்ஞர். 
  • ஆனந்த தீர்த்தர் எனவும்  போற்றப்பட்டார்.
  • இவரது தத்துவம் துவைதம் என்பதாகும்.
இராமாநந்தர்:
  • இவரது முயற்சியால் வைணவம் வடக்கே பரவியது.
  • இராமர் கீதை வழிபாட்டை பரப்பினார்.
  • சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார்.
  • இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார்.
  • சமயக் கருத்துக்களை முதன் முதலில் ந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார்.

நிம்பர்க்கர்:
  • இவர் தென்னிந்தியாவில் கோதாவரி நதிக்கரையில் சிறு கிராமத்தில் பிறந்தார்.
  • வடஇந்தியாவில் மதுராவிற்கருகேயுள்ள பிரஜா என்ற இடத்தில் வாழ்ந்தார்.
  • இவரது பக்தி நெறியைச் சேர்ந்தோர் இராதாகிருஷ்ண வழிப்பாட்டில் நம்பிக்கைக்  கொண்டிருந்தனர்.
  • இவரும் ‘சரணாகதி’ நெறியை வலியுறுத்தினார்.
  • இவரது கொள்கை பேதாபேதம் என்று அழைக்கப்படுகிறது.

கபீர்:
  • காசிக்கு அருகே லகர்டேலோ என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லீம் நெசவாளரால் வளர்க்கப்பட்டவர்.
  • இராமானந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
  • இந்து முஸ்லீம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டார்.
  • கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார்.
  • உண்மையே இயல்பானது. அது இல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை  அன்பினால் வெளிப்படுகிறது என்ற கருத்தை உடையவர்.
  • பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று என்றார்.

    நாம தேவர்:
    • மஹாராஷ்டிரா மாநிலத்தில் பண்டரிபுரம் என்னுமிடத்தைச் சார்ந்தவர்.
    • உண்மையான பக்தியும் கடவுள் வழிபாடுமே இவரது முக்கிய கொள்கையாகும்.

    குருநானக்:

    • சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த இவர் பஞ்சாப் மாநிலத்தில் தால்வந்தி என்ற கிராமத்தில் பிறந்தார்.
    • இவரது இனிய பாடல்கள் ஆதிகிரந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
    • இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க முயன்றார்.
    • சீக்கிய சமயம் இவரால் உருவாக்கப்பட்டது.

    வல்லபாச்சாரியர்:

    • இவர் காசியில் பிறந்தார்.
    • தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். 
    • இவரது கோட்பாடு சுத்த அத்வைதக் கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர்.
    • வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார்.
    • கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம்.

      இதன் தொடர்ச்சியை படிக்க...
      பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

1 கருத்துகள்