இசக்கி ஜூனியர் அஸிஸ்டென்ட் ஆன கதை...

TNPSC தேர்வர்களுக்கான உத்வேக பதிவு ...

இவர் பெயர் : இசக்கி.
TNPSC Group IV தேர்ச்சி வருடம் : 2012.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு (X Std) மட்டும்.
பணி : தொழிலாளர் நலத்துறை .


அரசு வேலையில் சேர வேண்டும் என எல்லோரையும் போல ஆசைப்பட்டார். பத்தாம் வகுப்பு முடிச்சது 1996ல். வேலைக்கு போக படிக்க ஆரம்பிச்சது 2007 ல். TNPSC Group IV தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும் என மிக கடுமையாக படித்தார்.
தனது அண்ணன் நடத்திய சிறிய ஹோட்டலை முழுமையாக கவனித்துக் கொண்டே தேர்வுகளுக்கு தயார் செய்தார். காலையில் 5 மணிக்கு எழுந்து ஹோட்டலை திறக்க வேண்டும். பின்பு கல்லால உட்கார்றது, சப்ளை செய்றது என 10 மணி வரை வேலை . அதற்கப்புறம் 12 மணி வரை ஓய்வு நேரம். 12 மணியிலிருந்து 2 மணி வரை மறுபடியும் ஹோட்டல். 2 மணியிலிருந்து 5 மணி வரை ஓய்வு நேரம் . மாலை 5 மணியிலிருந்து மீண்டும் ஹோட்டலில்... எல்லாம் முடிஞ்சு பாத்திரங்களையும் கழுவி முடிச்சு வெளியே வர இரவு 11 மணி. மீண்டும் மறுநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இதுவே அவரின் routine work.
அவருக்கு கிடைத்த மொத்த ஓய்வு நேரமே 10 மணி நேரம் தான். தூக்கத்திற்கு அடிப்படை தேவையான 6 மணி நேரத்தை கழித்து விட்டால் அவருக்கு கிடைத்த மொத்த நேரம் வெறும் 4 மணி நேரமே. கிடைத்த அந்த கொஞ்ச நேரத்தையும் வீணாக்காமல் படித்தார். அவர் இரவில் தூங்கிய நேரம் மிக மிக குறைவு. வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் மிக கடுமையாக முயற்சித்தார். அதிலும் அடிப்படைக் கல்வித் தகுதி மட்டுமே முடித்துள்ள நிலையிலும் கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இழக்காமல் படித்தார். இவர்லாம் எங்க Pass ஆகப்போறார் என்ற அலட்சியப் பார்வைகள் இவர் மீது உண்டு. எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி 2012ல தேர்ச்சி அடைந்து தொழிலாளர் நலத்துறையில் பணியில் Junior Assistant ஆக சேர்ந்து இப்போ Assistant ஆக பணிபுரிகிறார்.

மனமார்ந்த வாழ்த்துகள் இசக்கி. உனது கடும் முயற்சி மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு தன்னம்பிக்கையை தரும்.

தேர்வுக்கு இன்னும் 85 நாட்கள் மட்டுமே.

தேர்வில் தேர்ச்சி அடைந்தே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவெடுங்கள்.

நேரத்தை உருவாக்குங்கள்! திட்டமிட்டு படியுங்கள்!!
நிச்சயமாக வெற்றி உண்டு!  வாழ்த்துகள்!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்