திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு !

தமிழகத்தில் ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, சுங்கிடி சேலைகள், பத்தமடை பாய், சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம்,தஞ்சாவூர் ஓவியம், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் வெள்ளப்பூண்டு, மகாபலிபுரம் சிற்பங்கள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் முக்கிய பொருட்கள் ஆகும்.

தமிழகத்தின் 29 பொருட்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ள நிலையில் தற்போது திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகிய இரண்டையும் சேர்த்தால் 31ஆக் உயர்ந்துள்ளது,

இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது இச்சட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2003ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் போலி பொருட்கள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிப்பிடும் பொருளின் மீது பயன்படுத்தும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படுகிறது. இக்குறியீடு அந்தப் பொருளின் சொந்த இடத்தையும் நன்மதிப்பையும் பறைசாற்றும் சின்னமாக விளங்கும்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள நல்லாம்பட்டி, பப்பன்பட்டி, பாரப்பட்டி புதூர் அனுமந்த நகர் உள்பட பல பகுதிகளிலும் திண்டுக்கல் பூட்டு தயாரிப்பது ஒரு குடிசை தொழிலாகவே இருந்து வருகிறது. விவசாயம் இல்லாத போது, அதற்கு மாற்று தொழிலாக உருவெடுத்தது தான் பூட்டுத்தொழில். நவீன உலகத்தில் எந்திரங்களின் உதவியோடு தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருந்தாலும் கூட பூட்டு தயாரிக்கும் தொழிலை குடிசைத்தொழில் போல பல இடங்களில் செய்து வருகின்றனர்.

தனியொரு நபரால் தொடங்கப்பட்ட கூட்டுத்தொழில் நாளடைவில் மிகப் பிரபலமாகி, தற்போது பெரிய தொழிற்சாலையாக மாறியதாக கூறப்படுகிறது. பல்வேறு ரக பூட்டுகளை தயாரித்த நிலையில் பழைய திருடர்களும் உடைக்க முடியாத வலிமையான பூட்டு என்பதால் திண்டுக்கல் பூட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்