தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியிட விவரம்:
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி - 320, சேலம் - 141, திண்டுக்கல் - 106, ராமநாதபுரம் - 79, திருவள்ளூர் - 30, அரியலூர் - 15, நீலகிரி - 77, திருவண்ணாமலை - 109, புதுக்கோட்டை- 81, திருவாரூர்- 25, விழுப்புரம் - 101.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. பொதுப்பிரிவு முன்னாள் ராணுவ வீரர்கள் 48 வயதுடையோரும், மாற்றுத்திறனாளிகள் 40 வயதுடையோரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பட்டப்படிப்பை இடைவிடாமல் 10+2+3 என்ற ஆண்டு வரிசையில் தொடர்ச்சியாக படித்து முடித்திருக்க வேண்டும். கணினி அறிவு அவசியம், தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுப் பிரிவு மற்றும் எம்.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விதவைகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு வங்கிக்கும் விண்ணப்ப அவகாச காலம் மாறுபடுகிறது. விழுப்புரம் கூட்டுறவு வங்கி காலியிடங்களுக்கு 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை பணிகளுக்கு செப்டம்பர் 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த கிளைக்கான விண்ணப்பிப்பதற்கான கடைசிநாளை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
சென்னை விண்ணப்பதாரர்கள் www.chndrb.in என்ற இணையதள பக்கத்தை பார்க்க வேண்டும். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கங்களை பார்க்கலாம்.
Other distic applications apply panna mudiyuma
பதிலளிநீக்கு