லைப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா
வேலூர் கோட்டம்
ஆர்வமும், ஊக்கமும் நிறைந்த இளம் பட்டதாரிகளிடமிருந்து, கோட்டத்தின் கிளை அலுவலகங்களில் காசாளர், ஒற்றைச் சாளர உதவியாளர், வாடிக்கையாளர் சேவை நிர்வாகி போன்ற பல்வேறுட்ட எழுத்தர் பணிகளுக்கு உதவியாளராக (ASSISTANT) சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மொத்த காலியிடங்கள்: 18
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வலிமை வாய்ந்த நிதி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி யில் தொழில் முறையில் வளரவும், பயிலவும் இணையற்ற வாய்ப்புகள் கிடைக்கும். வணிகம், நிதி, காப்பீட்டு ஒப்புறுதி (Underwriting), காப்பீட்டு கணிப்பு (Acturial), வாடிக்கையாளர் வரவு, தகவல் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய எல்.ஐ.சி. மேன்மையான வாய்ப்பளிக்கிறது.
ஊதியம் மற்றும் இதர சலுகைகள் மிகச்சிறந்த பொதுத்துறை நிதி நிறுவனங்களுக்கு இணையாக வழங்கப்படும்.
நிகழ்விற்கான கால அட்டவணை பின்வருமாறு : இணைய வழி (ஆன்லைன்) பதிவு / கட்டணம் செலுத்துதல் - 17.09.2019 to 01.10.2019
உத்தேச இணையவழி (ஆன்லைன்)
முதல்நிலை (Preliminary) தேர்வு நாள் - 21 & 22.10.2019
கருத்துகள்
கருத்துரையிடுக