டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி?

மூன்றுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பதவியில் அமர முடியும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியாமல் போனால்கூட, மறுபடியும் முதலில் இருந்து இந்தத் தேர்வை எழுதியாக வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், இந்தத் தேர்வுக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் அளிக்கப்படாது.

முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுக் கேள்வியும், மொழிப்பாடக் கேள்விகளும் இடம்பெறும்.

மெயின் தேர்வை பொறுத்தவரை இதில் இரண்டு தாள்கள். பொது அறிவு முதல் தாள் மற்றும் பொது அறிவு இரண்டாம் தாள். இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும். ஒவ்வொறு தாளுக்கும், தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும்.

முதல்நிலைத் தேர்வு முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையிலானது. ஆனால், மெயின் தேர்வு ஒவ்வொரு கேள்விக்கும் கட்டுரை வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். பிளஸ் டூ தேர்வு எந்த முறையில் எழுதுகிறோமோ அந்த முறையில் இந்தக் கேள்வித்தாளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் கேள்விகள் இந்திய வரலாறு, நடப்பு நிகழ்வுகள், சர்வதேச நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், புள்ளியியல், தமிழக வரலாறு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் இந்திய அரசியல், இந்திய புவியியல், பொருளாதாரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவியல், தமிழர் பண்பாடு, இலக்கியம், தமிழ்நாடு அரசு நிர்வாகம் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

நன்றி : புதிய தலைமுறை

கருத்துரையிடுக

0 கருத்துகள்