தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2400 காலியிடங்கள்

TNEB Recruitment 2020
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் (மின்னியல்/இயந்திரவியல்/கட்டடவியல்) பணிக்கு மொத்தம் 2400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNEB வேலைவாய்ப்பு 2020 (TNEB Recruitment 2020) அறிவிப்பு படி தேர்ந்தெடுக்கும் முறையானது கணினி தேர்வு (Computer Test) என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கணினி தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020 (TNEB Recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

முதலில் www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

அவற்றில் தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020 (TNEB Recruitment 2020) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்