மண்வள அட்டை தினம்

பிப்ரவரி 19  –  மண்வள அட்டை தினம்
பிப்ரவரி 19 அன்று மண் சுகாதார அட்டை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நாளில் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மண்வள அட்டை என்றால் என்ன?

மண்ணின் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் இந்த மண்வள அட்டை நிர்ணயிக்கிறது. விவசாயிகள் சொந்த அனுபவத்தையும், அறிவுத்திறனையும் கொண்டு மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த அட்டை ஒரு கருவியாகப் பயன்படுகிறது. 
காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம். ஒரே நபர் இந்த அட்டையை தொடர்ந்து பூர்த்தி செய்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அட்டையின் மூலம் நிர்ணயிக்கும் மண்வளத்தின் தரம் பெரும்பாலும் விவசாயிகளின் அனுபவத்தைப் பொருத்ததேயன்றி எந்த ஆய்வகப் பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு இடத்திலுள்ள மண்ணின் தரத்தினை மற்றொரு இடத்திலுள்ள மண்ணின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இந்த அட்டையின் நோக்கமல்ல. ஆனால், ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்