ஆறுமுக நாவலர்


  • யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர்
  • காலம் : 1822 - 1889
  • இயற்பெயர் : ஆறுமுகனார்
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிக்கவர்.
  • 19 வயதில் இருமொழி கற்பிக்கும் ஆசிரியர்.
  • சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றியவர்.
  • 27ஆம் வயதில் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் கொடுத்தது.
  • இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்கள் அல்ல, அவை மருட்பாக்களே என்ற கொள்கையினர் மருட்பாக்கட்சினர்.
  • இவர் மருட்பாக் கட்சிக்குத் தலைமை ஏற்றவர்.
  • சென்னையில் அச்சுக்கூடம் அமைத்து சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தார்.
  • நிறுத்தக் குறியீடுகளை முதல் முதலாகத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.
  • தமிழ் உரைநடையின் வேந்தராகப் போற்றப்பட்டார்.
  • வசன நடை கைவந்த வல்லாளர் என பரிதிமாற்கலைஞரால் பாராட்டப்பெற்றவர்.
  • எழுதிய நூல்கள் :
  • நன்னூல் காண்டிகை உரை, சைவ சமய வினா விடை, இலக்கணச் சுருக்கம், பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், சிறுவர்க்கான பால பாடல்கள்.
  • எழுதிய உரைகள்: சூடாமணி நிகண்டு உரை, சௌந்தரிய லகரி உரை, திருச்சிற்றம்பலக் கோவை உரை, கோயிற்புராணம் உரை.
  • பதிப்புகள்: பரிமேலழகர் உரை, திருக்கோவை உரை சேனாவரையம், பிரயோக விவேகம், கந்தபுராணம், சேது புராணம், பாரதம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்