பிரம்ம ஞான சபை

  • பிரம்மஞான சபை (The Theosophical Society) என்பது உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்
  • பிரம்ம ஞான சபை நிறுவப்பட்ட ஆண்டு கி.பி. 1875. 
  • அமெரிக்காவில் நியூயார்க் நகரில், ரஷ்ய பெண்மணி மேடம் பிளவட்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் ஹென்றி எஸ். ஆல்காட் ஆகியோர் நிறுவினர்.
  • தியோஸ் என்றால் கடவுள் - சோபாஸ் என்றால் அறிவு. தியோசோபி என்றால் கடவுளைப் பற்றிய அறிவு என்று பொருள்படும்.
  • இதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் இந்தியாவின் சென்னை, அடையாரில் அமைந்துள்ளது.  
  • கி.பி.1893-ல் அன்னிபெசன்ட் அம்மையார் இச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • அன்னிபெசன்ட் அம்மையார் நடத்தி வந்த செய்தித்தாள் - நியூ இந்தியா.
  • இவர் இந்தியர்கள் சுயாட்சி பெற ‘தன்னாட்சி’ இயக்கத்தை உருவாக்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்