சமூக அறிவியல் முக்கிய பாடக்குறிப்புகள் | அட்சக்கோடுகள்


புவிக்கோளத்தில் கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.

0 டிகிரி அட்சக்கோடு புவியிடைக்கோட்டைக் குறிக்கும். இக்கோடு புவிக்கோளத்தை இரு சம அரைக்கோளங்களாகப் பிரிக்கின்றது.

90 டிகிரி வட அட்சக்கோடு வட துருவத்தையும், 90 டிகிரி தெற்கு அட்சக்கோடு தென் துருவத்தையும் குறிக்கும்.

23 1/2 டிகிரி வட அட்சக்கோடு வட அயனத்தையும் (கடகரேகை), 23 1/2 டிகிரி தென் அட்சக்கோடு தென் அயனத்தையும் (மரகரேகை) என்றும் குறிப்பிடப்படுகிறது.

66 1/2 டிகிரி வட அட்சக்கோடு ஆர்டிக் வட்டம் எனவும், 66 1/2 டிகிரி தென் அட்சக்கோடு அண்டார்டிக் வட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்