ஓவியக்கலை | TNPSC Tamil Study Notes

ஓவியக்கலை

7th Tamil  Text book Notes for TNPSC, TET, PG TRB Exams


  • தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது ஓவியக்கலை
  • கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் மக்கள் தாம் தங்கிய மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
  • தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
    தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர்.
  • தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் என கூறும் நூல்கள் பரிபாடல், குறுந்தொகை.
  • ஓவியம் வரைதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும்.  இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும்.
  • தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது.
  • சிற்பி, தான்  செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு.
  • ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது.
  • ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
  • ஓவியர் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்.
  • நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்’ என இலக்கணம் வகுத்திருக்கிறார்.
  • ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ஓவியப் புலவன் எனப் போற்றப்பட்டார்.
  • ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்.
  • ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்.
  • ஆடல் மகள் மாதவி, ‘ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்’ எனச் சிலம்பு பகர்கிறது. இதிலிருந்து ஓவியக் கலைக்கெனத் தனி இலக்கண நூல்கள் இருந்தன என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.
  • வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
  • வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு வட்டிகைப் பலகை எனப் பெயரிட்டிருந்தனர்.
  • ஓவியம் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என வழங்கப்பட்டன.
  • இறை நடனம் புரிவதற்கே சித்திர சபை ஒன்றனை ஏற்படுத்தியுள்ளனர்.
  • புறநானூற்றில், ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் போற்றுகிறப்படுகிறது.
  • சுடுமண் சுவர்மீது வெண்சுதை (சுண்ணாம்பு) பூசிச் செஞ்சாந்துகொண்டு ஓவியங்கள் தீட்டினர். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்னும் பழமொழி இவ்வாறுதான் உருவாயிற்று.
  • மரப்பலகை, துணிச்சீலை, திரைச்சீலைகளில் ஓவியம் எழுதினர்.
  • நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை ‘ஓவிய எழினி’ என்ற சொல் கொண்டு அழைத்தனர்.
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்