மாநில கட்சி அந்தஸ்து - தேசிய கட்சி அந்தஸ்து

மாநில கட்சி அங்கீகாரம்

ஒரு கட்சியானது கீழ்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், அது 'மாநில கட்சி' அந்தஸ்து பெறும்.

1. கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலோ அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலோ பதிவாகும் வாக்குளில், 6 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். - (அல்லது)

2. கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 25 மக்களவை உறுப்பினர்களுக்கு 1 உறுப்பினர் என்ற விகிதத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)

3. கடைசியாக நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 35 பேரவை உறுப்பினர்களுக்கு 1 உறுப்பினர் என்ற விகிதத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய கட்சி அங்கீகாரம்

1. மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். (அல்லது)

2.   மக்களவை அல்லது சட்டபேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். (அல்லது)

3.  நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், 'மாநில கட்சி' அந்தஸ்து பெற்றால், அதற்கு தேசிய கட்சி' அந்தஸ்து வழங்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்