திட்டக்கமிஷன் VS நிதி ஆயோக்

இந்தியாவில் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்த திட்டக்கமிஷன் 2014-ஆம் ஆண்டுடன் காலாவதியாகிப்போனது. அதற்குப் பதிலாக நேஷனல் இன்ஸ்ட்டியுஷன் ஃபார் டிரான்ஸ்ஃ பார்மிங் இந்தியா (National Institution for Transforming India (NITI) என்னும் நிதி ஆயோக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய திட்டக்கமிஷனுக்குப் பதிலாக மத்திய அரசு புதிதாக உருவாக்கிய நிதி ஆயோக் 2015 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. தமிழில் இதை இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய அமைப்பு என்று கூறலாம்.

புதிய செயல்திட்டம்: மத்திய மாநில அரசுகளின் சிந்தனை அமைப்பாக நிதி அயோக் செயல்படும். கொள்கை வகுப்பில் உதவும். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கியமான கொள்கை விஷயங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு நுணுக்கமான அறிவுரை வழங்கி, தேசிய செயல்திட்டங்களை வகுத்துக் கொடுக்கும். இதற்காக கூட்டுறவான கூட்டாட்சி முறையை பேணிக்காக்க பாடுபடுவதுடன் உறுதியான நிர்வாகத்துக்கு ஆலோசனைகள் வழங்கவும் செய்யும். பொருளாதார முன்னேற்றத்தால் போதிய பலனடையாத துறைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

குறிக்கோள்கள்:

நாட்டின் வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் துறை வாரியாகத் திட்டங்களை இயற்றுவதும், அதை செயல்படுத்த தேவையான அறிவுரைகள் வழங்குவதும்.

கூட்டுறவுடன் கூடிக் கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநில அரசுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு, மாநிலங்களின் தேவையை புரிந்து கொண்டு, அவற்றிற்கு ஆதரவு அளித்து, வலுவான நாட்டை உருவாக்குவது.

கிராமப்புறங்களில் இருந்துத் திட்டங்களைத் துவங்கி, படிப்படியாக மேல்நோக்கித் திட்டங்களை இயற்றுவது, செயல்படுத்துவது.

நாட்டிற்கு பாதுகாப்புடன் கூடிய பொருளாதார திட்டங்கள், கொள்கைகள் தயாரிப்பு பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கி உள்ள துறைகள் மற்றும் மக்களை முன்னேற்றும் வகையில் சிறப்பு கவனம் செலுத்துவது

நிதி ஆயோக் பற்றி அறிவிப்பு வெளியானது 2014, ஆகஸ்ட் 15 (பிரதமரின் சுதந்திர தின உரை) நிதி ஆயோக் நடைமுறையில் வந்த நாள் 2015, ஜனவரி 1.

நிதி ஆயோக் அமைப்பின் முதல் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி

நிதி ஆயோக் அமைப்பின் முதல் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா

உறுப்பினர்கள்:

முழு நேர உறுப்பினர்கள்: பொருளாதார விஞ்ஞானி பிபேக் தேப்ராய், முன்னாள் பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு செயலர். வி.கே. ஸரஸ்வத்
அலுவல் சாரா உறுப்பினர்கள்: மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி, சுரேஷ்பிரபு. ராதா மோகன் சிங்
சிறப்பு அழைப்பாளர்கள்: மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தாவர் சந்த், கெலோட், ஸ்மிருதி இராணி

நிதி ஆயோக்
  • இது ஒரு சிந்தனைப் பெட்டகம் (Think Tank) என்ற நிலையில் செயல்படும்.
  • பிரதமரே இதன் தலைவர்
  • துணைத்தலைவருடன் ஒருதலைமைச் செயல் அதிகாரியும் (CEO) இருப்பார்.
  • சீனாவின் National Development Reforms Commission இதன் மாதிரி வடிவம்.
  • முழுநேர உறுப்பினர்கள் இருவர். நான்கு காபினெட் அமைச்சர்கள் இதன் உறுப்பினர்கள். மூன்று அமைச்சர்கள் சிறப்பு அமைப்பாளர்கள்.
  • Co-operative Federalism
  •  மாநிலங்களுக்கும் இதில் பங்குண்டு, மாநில முதல்வர்கள், லெப் கவர்னர்கள் அடங்கிய ரீஜனல் கவுன்சில்
  • ரீஜனல் கவுன்சில் விஷயங்களைக் குறித்து சர்ச்சை செய்யும்.
  • மாநிலங்களின் தேவைக்கேற்ற திட்டங்கள்.
  • பரிந்துரைக்கும் அதிகாரம் மட்டும் தான்
  • பொது ஒப்புகை அடிப்படையிலேயே திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • ஐந்தாண்டுத் திட்டங்களே தொடரவேண்டுமா என்பது பற்றி முடிவெடுக்கும்.

திட்டக்கமிஷன்
  • ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்தியது
  • பிரதமர் இதன் தலைவர், தலைவருக்கு அடுத்த பொறுப்பு மிக்க பதவி துணைத்தலைவர்.
  • ரஷ்ய தொழில் மயமாக்கலுக்கு உதவும் விகிதத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த மாதிரித்திட்டம்
  • இதன் இறுதி காலங்களில் எட்டு முழுநேர உறுப்பினர்கள் பதவியிலிருந்தார்கள்.
  • மையப்படுத்தப்பட்ட திட்ட உருவாக்கம்.
  • மாநிலங்களுக்கென்று குறிப்பிடத்தக்க செல்வாக்கோ, பங்களிப்போ இல்லை.  திட்டக் கொள்கைகளை அங்கீகரிக்க தேசிய வளர்ச்சி கவுன்சில்  
  • பல நேரங்களிலும் அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களின் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
  • நிதி ஒதுக்கீட்டு அதிகாரம் கொண்டது
  • பலவேளைகளிலும் திட்டங்களை மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்தது.
  • ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுமையான வடிவம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்