சர்.சி.வி. இராமன்

சர்.சி.வி. இராமன் (New 6th Tamil Text book Notes)

  • 1921 ஆம் ஆண்டு, மத்திய தரைக் கடலில்,  கப்பல் ஒன்றில் சர்.சி.வி. இராமன் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 
  • அவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 
  • திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது.  இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார்.
  • பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.
  • ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவு என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
  • இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. 
  • சர்.சி.வி.இராமன் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாள் ஆண்டுதோறும் ‘தேசிய அறிவியல் நாள்’ எனக் கொண்டாடப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்